-->

தாம்பத்தியத்தில் சிறந்து விளங்க இவற்றை கடைபிடியுங்கள்

தாம்பத்தியம் சிறக்க

பொதுவாக சில ஆண்களுக்கு தாம்பத்ய வாழ்க்கை என்பது திருப்திகரமாக இருப்பது இல்லை. எனவே ஆண்கள் தாம்பத்தியத்தில் சிறக்க மருத்துவர்களை அணுகுவது, சில மருந்துகளை எடுத்துக்கொள்வதும் உண்டு.
தாம்பத்தியம் செய்வது எப்படி

ஆனால் கீழ்காணும் இந்த விதிமுறைகளை நீங்கள் கடைபிடித்தால் போதும் மருந்தும் வேண்டாம் டாக்டரும் வேண்டாம். நம்முடைய உணவு முறைகளையும், வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்தாலே போதும், இது போன்ற பிரச்சினைகளை மிக எளிதாக சமாளிக்க முடியும். சரி அவை என்னென்ன என்பதை பின்வருவனவற்றில் காண்போம்,

ஆரோக்கியம்

நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலே தாம்பத்திய வாழ்க்கை மிக சிறப்பாக அமையும். உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது உடற்பயிற்சிகள் செய்வதும், நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி போன்றவை செய்வதும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இவற்றை தினமும் தவறாமல் செய்தாலே இதயம் வலுப்பெறும். இதயம் வலுப்பெற்றால் உடலில் சீரான ரத்த ஓட்டம் இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஈடுபாடு ஏற்படும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
நாம் சாப்பிடும் உணவில், தினமும் வெங்காயம், பூண்டு போன்றவை இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இரத்த ஓட்டத்திற்கு மிகவும் முக்கியமானது வெங்காயமும் பூண்டும் ஆகும். மேலும் இவைகள் ஒரு காம பெருக்கி. பழ வகைகளை எடுத்து கொண்டால் தினமும் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். சீரான ரத்த ஓட்டம் ஏற்படும் போது  தாம்பத்தியத்தில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது.
யோகா
வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு பணிசுமை காரணமாக மன உளைச்சல், ரத்த அழுத்தம் போன்றவை கொண்டிருப்பார்கள். இதனால்  தாம்பத்ய வாழ்க்கையில் அவர்களுக்கு பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தினமும் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது உள்ளிட்டவற்றை செய்து வந்தால் மனம் லேசாகும். இதனால்  எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
புகைபிடித்தல், மது அருந்துதல்
புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் போன்றவை தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் செய்து விடும். எனவே இந்த பழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும். அதற்கு பதில் தினமும் உடற்பயிற்சி நல்ல ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொண்டாலே போதும் தாம்பத்ய வாழ்க்கையில் மிக சிறப்பாக விளங்க முடியும்.
சூரிய வெளிச்சம்
தினமும் சிறிது நேரமாவது சூரிய வெளிச்சம் நம் உடல் மீது படும்படி செய்ய வேண்டும். சூரிய வெளிச்சத்தில் நிற்கும்போது நமது உடல் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை தடுக்கும். இந்த மெலட்டோனின் ஹார்மோன் பொதுவாகவே நாம் சோர்வாக இருப்பதை போல உணர வைக்கும்.
மெலட்டோனின் ஹார்மோன் உருவாக்கத்தை நாம் தடுக்கும்போது சோர்வு ஏற்படுவதை நிறுத்தி நமது உடலை மிகவும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வைக்கும். மேலும் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட அதற்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும்.
தாம்பத்தியம் அதிக நேரம்

சுய இன்பம்
தாம்பத்யத்தில் அதிக நேரம் ஈடுபட வேண்டுமென ஆர்வம் உள்ள ஆண்கள் சுய இன்பம் செய்யலாம். ஆனால் அது ஒரு அளவாக இருப்பது நல்லது. அளவுக்கு அதிகமானால் அதுவே ஒரு சில பிரச்சனைகளை உண்டாக்கும்.

இவ்வாறு சுய இன்பம் செய்யும் போது நாளடைவில் அது அவர்களுக்கு பழகி விடவே தன்னுடைய துணையுடன் அதிக நேரம் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட உதவி புரியும்.
Previous Post Next Post