-->

உடல் சூட்டை குறைக்கும் வெந்தயக் குழம்பு

தினமும் 1 ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து கண் எரிச்சல், முடி உதிர்வு, சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி, இவை அனைத்தும் மறைந்துவிடும்.


சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த வெந்தயம் பயன்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் வெ
ந்தயத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

தேவையான பொருட்கள்

  1. கடுகு – 1 ஸ்பூன்
  2. வெந்தயம் – 1 ஸ்பூன்
  3. ஜீரகம் – 1 ஸ்பூன்
  4. பூண்டு ( தோல் உரித்தது ) – 50 கிராம்
  5. சின்ன வெங்காயம்  - 100 கிராம்
  6. காய்ந்த மிளகாய் - 2
  7. கறிவேப்பிலை – சிறிதளவு
  8. உப்பு – தேவையான அளவு
  9. நல்லெண்ணெய்  - தேவையான அளவு
  10. மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள்  - 1 ஸ்பூன்
  12. வெந்தய பொடி ( வறுத்து பொடி செய்தது )  – 2 ஸ்பூன்
  13. புளிக் கரைசல்  - தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் தேவையான அளவு புளியை கரைத்து நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  3. எண்ணெய் காய்ந்ததும் கடுகு,வெந்தயம்,ஜீரகம், சேர்த்து தாளிக்கவும்.
  4. பின்னர் அதில் உரித்து வைத்துள்ள பூண்டை சேர்க்கவும்.
  5. பூண்டு வதங்கியவுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  6. பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  7. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  8. பூண்டு , வெங்காயம் நன்கு வதங்கியாவுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும்.
  9. புளிக்கரைசல் நன்கு கொதித்து குழம்பு சுண்டி வரும்போது வறுத்து பொடி செய்து வைத்துள்ள வெந்தயப் பொடியை செரிக்கவும்.
  10. வெந்தயப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவம்.
  11. சுவையான வெந்தயக் குழம்பு ரெடி.




Previous Post Next Post