10 பொருத்தம் என்றால் என்ன? அவற்றில் எவையெல்லாம் முக்கியமானவை?
திருமணம் என்பது இரண்டு மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்
மட்டுமல்லாமல் இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்டதாகும். திருமணத்திற்கு பொருத்தம்
பார்க்கும்போது ஒரு சில பொருத்தங்கள் முக்கியமானதாக
இருக்க வேண்டும் என ஜோதிடவியலில் வகுக்கபட்டுள்ளது.
அதன்படி பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான
ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது
பொருந்தியிருப்பது அவசியம் என கூறுவார்கள். முன்பெல்லாம் 12 பொருத்தம் பார்க்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அது 10 ஆக குறைந்து விட்டது.
அப்படி இந்த 10 பொருத்தங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதை தோஷம் கழித்து சரிசெய்யலாம் என்றும், பரிகாரம் செய்து
விடலாம் எனவும் ஜோதிட வல்லுனர்கள் தெரிவிகின்றனர். இனி, 10 பொருத்தம் என்றால் என்ன? மற்றும் அதன்
விரிவான விளக்கத்தை பார்க்கலாம்.
1. தினப் பொருத்தம்
ஓர் பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து ஆணின் ஜென்ம
நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது,
2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 ஆக அதன் எண்ணிக்கை இருந்தால், தினப்பொருத்தம் உள்ளது. இந்தப் பொருத்தம் இருந்தால் தான்
ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். இந்த பொருத்தம் இருந்தால்தான் தம்பதிகள்
மனம் ஒத்து வாழ்வார்கள். ஆண், பெண் இருவரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் இதன் மூலம்
கணிக்கபடுகிறது.
2. கணப் பொருத்தம்
27 நட்சத்திரங்களும் தேவ கணம், மனித கணம், ராக்ஷஸ கணம் என
மூன்றாகப் பிரிக்கபட்டுள்ளது. மணமகள், மணமகன் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணமாக இருந்தால், கணப்பொருத்தம் உண்டு. ஒருவேளை இருவரின்
நட்சத்திரங்களும் மனித கணமாக இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு. ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களும் ராக்ஷஸ கணமாக இருந்தால்
கணப்பொருத்தம் கிடையாது. ஒன்று ராக்ஷஸ கணமாக இருந்து மற்றொன்று மனித மற்றும் தேவ
கனமாக இருந்தாலும் இந்த பொருத்தம் கிடையாது. இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம்
உண்டு.
3. மகேந்திரப் பொருத்தம்
மகேந்திரப் பொருத்தமானது புத்திர பாக்கியத்தை குறிப்பதாகும்.
பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக அந்த எண்ணிக்கை
இருந்தால் மகேந்திரப் பொருத்தம் உள்ளது என
பொருள். இந்தப் பொருத்தம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம், செல்வ விருத்தி
போன்றவை உண்டாகும்.
4. ஸ்த்ரீ தீர்க்க பொருத்தம்
பெண்ணின் ஜென்ம
நட்சத்திரத்திலிருந்து ஆணின் ஜென்ம நட்சத்திரம் வரை எண்ணும்போது 13-க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் உள்ளது என
பொருள். இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க
முடியும். சொத்துக்கள் தங்கும்.
5. யோனி பொருத்தம்
5. யோனி பொருத்தம்
இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இடையே தாம்பத்தியம்
இனிக்கும். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும்
ஒரு விலங்கு குறிக்கப்படுகிறது. இதில் ஒன்றுக்கு ஒன்று பகை இல்லாத விலங்கினங்களைச்
சேர்க்க வேண்டும். இந்த பொருத்தம் இல்லாவிட்டால் தாம்பத்திய வாழ்க்கை கசந்து
விடும்.
6. ராசிப் பொருத்தம்
6. ராசிப் பொருத்தம்
இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து
செழிக்கும். இது பொதுவாக பெண்ணின் ராசியிலிருந்து பிள்ளையின்
ராசி எண்ணிக்கையில் 6க்கு அதிகமாக இருக்க
வேண்டும். வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க இந்த பொருத்தம் அவசியம் தேவை.
7. ராசி அதிபதிப் பொருத்தம்
7. ராசி அதிபதிப் பொருத்தம்
இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும்.
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாகத் உள்ளது. ராகு, கேது இல்லாமல் மீதியுள்ள 7 கிரகங்களும், 12 ராசிகளுக்கும் அதிபதிகளாகத் திகழ்கின்றனர். இந்த கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு, சமநிலை, பகை என்னும் மூன்று நிலைகளில் இருப்பார்கள்.
ஆணின் ராசி அதிபதியும் பெண்ணின் ராசி அதிபதியும் நட்பு அல்லது சம நிலை
என்னும் அளவில் அவர்களின் உறவு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் திருமணப்
பொருத்தம் உண்டு.
8. வசியப்
பொருத்தம்
இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும்
அன்யோன்யமாக இருப்பார்கள். இந்த பொருத்தம் இருந்தால்தான் ஆண், பெண் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வார்கள்.
9. ரஜ்ஜுப் பொருத்தம்
இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக
இருப்பாள். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு ரஜ்ஜு உண்டு. இதை கயிறு பொருத்தம்
என்றும் கூறுவார்கள். ரஜ்ஜு ஐந்து வகைப்படும். அவை, சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, நாபி ரஜ்ஜு, தொடை ரஜ்ஜு, பாத ரஜ்ஜு . ஆண், பெண் நட்சத்திரங்கள்
ஒரே ரஜ்ஜுவில் இருக்கக்கூடாது. எனவே, பொருத்தம் பார்க்கும்போது இது முக்கிய இடத்தை பெறுகிறது.
10. வேதை பொருத்தம்
இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய
துக்கங்கள் வராமல் காக்கும். வேதை என்றால் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று பொருள். இதுவும் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய பொருத்தமாகும். எந்த
நட்சத்திரத்துக்கு எந்த நட்சத்திரம் வேதை என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப
மணமுடிக்க வேண்டும்..தம்பதியர் வாழ்வில் இன்பம், துன்பம் எந்த அளவில் இருக்கும்
என்பது இந்த பொருத்தத்தை வைத்து முடிவு செய்யப்படுகிறது.
பத்துப் பொருத்தங்களில் முக்கியமான பொருத்தங்களான, தினப் பொருத்தம், கணப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், வேதைப் பொருத்தம் மற்றும் ரஜ்ஜு பொருத்தம் ஆகியவை முக்கியம். ஆகவே, இந்தப் பொருத்தங்கள் இருக்கின்றனவா என்று பார்த்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். இந்த பொருத்தங்களின் அடிப்படையில் அமையும் திருமண வாழ்வானது எந்தவித பிரச்னையும் ஏற்படாது என சொல்லபடுகிறது.
உங்களின் திருமண பொருத்தத்தை காண இங்கு கிளிக் செய்யவும்.