-->

பலவீனத்தை உடைத்து உடலுக்கு பலத்தை கொடுக்கும் பாதாம் அரிசி கஞ்சி

பாதாம் அரிசி கஞ்சி 

பாதாம் அரிசி கஞ்சியை வாரம் 3 முறை செய்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
பலவீனமான உடலை பலப்படுத்தும் சக்தி பாதாமுக்கு உண்டு.

பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளன. பாதாமை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு வராது.

தினமும் காலை உணவுடன் பாதாம் அரிசி கஞ்சி எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். 
  

தேவையான பொருட்கள்

  1. பாதாம் பருப்பு -  10
  2. புழுங்கல் அரிசி -1 கரண்டி
  3. நாட்டுச்சர்க்கரை – 50 கிராம் 
  4. உப்பு தேவையான அளவு
  5. பால் -  2 கப்

செய்முறை
  1. கஞ்சி செய்வதற்கு முதல் நாள் இரவு பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. புழுங்கல் அரிசியையும் நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறவைத்துக் கொள்ளவும்.
  3. முதலில் பாதாமை தோல் உரித்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  4. அத்துடன் ஊறவைத்துள்ள அரிசியையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
  6. பின்னர் எடுத்து வைத்துள்ள 2 கப் பால் சேர்த்து நன்கு கிளறவும்.
  7. பால் சேர்த்த பின் தேவையான அளவு நாட்டுசர்க்கரையை சேர்த்துக் கிளறவும். அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  8. அனைத்தையும் நன்கு கிளறி இறக்கினால் சுவையான பாதாம் அரிசி கஞ்சி ரெடி.

Previous Post Next Post