தோஷங்கள் நிவர்த்தி அடைய வணங்க வேண்டிய தெய்வங்கள்
ஒருவரின் லக்கனத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து வழிபட வேண்டிய தெய்வங்கள் வேறுபடும். அந்தந்த கிரகதிர்க்கு உரிய தெய்வங்களை வழிபடும்போது தோஷத்தினால் உண்டாகும் பாதிப்பின் வீரியம் குறையும்.
எந்த தெய்வத்தை வணங்கினால் தோஷ நிவர்த்தி உண்டாகும் என்பதை பார்ப்போம்.
சூரியன்
ஜாதகத்தில் லக்னத்தோடு சூரியன் இருந்தால் அவர்கள் சூரிய பகவானை வணங்கவேண்டும். தினமும் “ஓம் சூர்ய நாராயணரே போற்றி ” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இவ்வாறு சூரியனை வழிபட்டு வந்தால் சூரியனால் உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகும்.
சந்திரன்
ஜாதகத்தில் லக்னத்தோடு சந்திரன் இருந்தால் அவர்கள் மகாலட்சுமியை வணங்க வேண்டும். தினமும் “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தால் ஜாதக தோஷங்கள் விலகும்.
சுக்கிரன்
ஜாதகத்தில் லக்னத்தோடு சுக்கிரன் இருந்தால் அவர்கள் அம்மனை வணங்க வேண்டும். தினமும் “ஓம் சக்தி” என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தால் சகல தோஷங்கள் விலகி வாழ்க்கை சுபிக்க்ஷம் உண்டாகும்.
செவ்வாய்
ஜாதகத்தில் லக்னத்தோடு செவ்வாய் இருந்தால் அவர்கள் முருகபெருமானை வணங்க வேண்டும். தினமும் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தால் ஜாதக தோஷங்கள் விலகும்.
புதன்
ஜாதகத்தில் லக்னத்தோடு புதன் இருந்தால் அவர்கள் ஸ்ரீராமனை வணங்க வேண்டும். தினமும் “ஸ்ரீராமஜெயம்" என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.
குரு
ஜாதகத்தில் லக்னத்தோடு குரு இருந்தால் அவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். தினமும் “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.
சனி
ஜாதகத்தில் லக்னத்தோடு சனி இருந்தால் அவர்கள் வெங்கடேச பெருமாளை வணங்க வேண்டும். தினமும் “ஓம் நமோ நாராயாணாயா “ என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.
ராகு
ஜாதகத்தில் லக்னத்தோடு ராகு இருந்தால் அவர்கள் துர்கை அம்மனை வணங்க வேண்டும். அதோடு தினமும் “ஓம் துர்கா தேவியே போற்றி ” என்று துர்கையின் நாமங்களை போற்ற வேண்டும்.
கேது
ஜாதகத்தில் லக்னத்தோடு கேது இருந்தால் விநாயகரை வணங்க வேண்டும். தினமும் “ஓம் சக்தி விநாயக நமஹ” என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.