தண்ணீர் எப்போது குடிக்க கூடாது?
உடலில் 70 சதவீத தண்ணீர் தசைகளிலும், 90 சதவீத தண்ணீர் மூளையிலும் மற்றும் 83 சதவீத தண்ணீர் இரத்தத்திலும் கலந்து உள்ளது.
இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதின் மூலம் பல்வேறு
நன்மைகள் ஏற்படுகின்றன.
நமது செல்களுக்கு
சத்துக்களை எடுத்துச் செல்லவும் மற்றும் காது, மூக்கு, தொண்டை பகுதிகளை ஈரப்பதமாக வைத்திருக்கவும்
தண்ணீர் உதவுகிறது.
அப்படிப்பட்ட
தண்ணீரை சில நேரங்களில் குடிக்காமல் இருப்பதன் மூலமும் சில நன்மைகள்
உண்டாகும்.
தண்ணீரை எந்தெந்த நேரங்களில்
குடிக்க கூடாது எனவும் குடித்தால் என்ன ஆகும் எனவும் கட்டாயம் தெரிந்து
கொள்ளுங்கள்.
காரமான உணவிற்கு
பின்பு
சிலர் காரமான
உணவுகளை உண்ட பின்பு உடனே நீர் அருந்தும் பழக்கம் கொண்டு இருப்பர். காரமான உணவு
சாப்பிட்ட பிறகு நாம் நீர் அருந்தினால் அவை குடல் பகுதிக்கு சென்று வேறு விதமன
விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்திவிடும்.
தூங்குவதற்கு
முன்
பலருக்கும் இரவு
படுக்கைக்கு செல்லும் முன் தண்ணீர் குடித்து விட்டு படுக்கும் பழக்கம் இருக்கும்.
இப்படி இரவு தண்ணீர் குடிப்பதால் இரவு நேரத்தில் கிட்னி மெதுவாகவே வேலை செய்யும்
இதனால் உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும்.
சாப்பிடும் போது
பலரும்
சாப்பிடும் போதும் சாப்பிட முடித்த பின்பும் தண்ணீர் குடிப்பார்கள். இவ்வாறு
குடித்தால் அவை செரிமான கோளாறை ஏற்படுத்தும். மேலும் மது அல்லது வேறு ஏதேனும்
குளிர் பானங்களை சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக
மாறி விடும்.
அளவுக்கு அதிகமாக
ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடித்தாலே நமது உடலுக்கு
போதுமானது. மேலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்களின் உடலில் பாதிப்பை
சந்திக்கும் முதல் உறுப்பு உங்களின் கிட்னி தான். அதிக தண்ணீர் கிட்னியின் செயல்திறனை
குறைத்து விடும். மேலும் ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.
உடற்பயிற்சிக்கு
பிறகு
உடல் எடையை
குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை
அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம்
உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.