பேயாக அலைபவர்கள் யார் ?
உலகில் இருக்கும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் இருக்கும் பொதுவான விஷயங்கள் பசி, தாகம், தூக்கம் போன்றவை மட்டுமல்ல
மரணமும்தான். பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம். பூமியில்
பிறந்த அனைத்து உயிர்களும் கண்டிப்பாக ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். அனைத்து
மதங்களிலும் மரணம் பற்றிய கருத்தானது ஒன்றுதான். அனைத்து மதங்களிலும் மரணத்திற்கு
பிறகான வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.
பொதுவாக உயிர்களின் வாழ்க்கை சுழற்சி
என்பது, ஒரு உயிர் பிறக்கிறது, பின்பு அதன் ஆயுட்காலம் முடிந்தபின் அதன் பின் உடலை விட்டு பிரிந்து
மீண்டும் அதன் மறுசுழற்சியை தொடங்குகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த
ஆன்மாவானது மேல்லோகத்திற்கு செல்லும் அல்லது பூமியில் ஆவி மற்றும் பேயாக சுற்றும்
என்று புராண சாஸ்திரங்கள் கூறுகிறது. இறந்த போன ஆன்மாக்கள் எப்படி உலகத்தில் பேயாக
சுற்றுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தர்மம்
மனித வாழ்க்கை என்பது பல்வேறு
கட்டங்களை கொண்டது ஆகும். மனித உருவில் இருக்கும் போது ஆன்மாவானது வாழ்க்கையில்
பல்வேறு நிலைகளை எதிர்கொள்கிறது. வாழும்போது அது செய்யும் செயலை பொறுத்து அதன்
கர்ம பலன் மற்றும் தர்மம் நிர்ணயிக்கப்படுகிறது.
இறப்பிற்கு பிறகு ஆன்மாவிற்கு இரண்டு
நிலைகள் உள்ளது. ஒன்று விடுதலை மற்றொன்று கட்டுப்பாட்டிற்குள் இருப்பது. விடுதலை
அடையும் ஆன்மாவானது மறுவுலகில் கடவுளை உணர்ந்து மறுபிறவி இல்லாத வாழ்க்கையை
வாழும்.
நமது சாஸ்திரங்களின் படி இறப்பிற்கு
பிறகு அந்த ஆன்மாவின் பூதஉடல் மட்டுமே அழிகிறது. ஆனால் அதன் கர்ம பலன்களை பொறுத்து
ஆன்மாவானது அடுத்த பிறப்பிற்கு தயாராகிறது.
கட்டுப்பாட்டில்
இருக்கும் ஆன்மா
ஆன்மாவானது இறப்பிற்கு பின் ஒன்று
சொர்க்கத்திற்கு செல்லும் அல்லது நரகத்திற்கு செல்லும். இது அந்த ஆன்மாவானது
வாழும்போது செய்யும் பாவ புண்ணியங்களை பொறுத்து இது முடிவு செய்யப்படும்.
புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையையும், பாவம் செய்தவர்கள் நரகத்தில் அவர்களின் பாவங்களுக்கான தண்டனைகளையும்
அனுபவிப்பார்கள் என கூறுகிறது கருட புராணம்.
பேயாக
மாறும் ஆன்மா
பொதுவாக ஆன்மாக்கள் விடுதலை அடையாமல்
மேலோகத்திற்கோ அல்லது நரகதிற்கோ செல்லாமல் இரண்டுக்கும் நடுவில் சிக்கி கொள்ளும்.
இதற்க்கு காரணம் அது அந்த ஆன்மாவின் நிறைவேறாத ஆசை, உறவு, அல்லது செய்யாமல் விட்ட கடமையாகவோ
இருக்கலாம். இதனால் அந்த ஆன்மா ஆவி அல்லது பேயாக மாறுகிறது.
இறுதி
சடங்குகள்
இறந்த ஆன்மாவின் நிறைவேறாத ஆசைகள்
அவற்றை மரணத்திற்கு பிறகு உலகத்தை விட்டு செல்ல முடியாமல் தடுக்கிறது. இந்த
மதத்தில் நடைபெறும் இறுதி சடங்குகள் ஆன்மாக்களுக்கு அமைதியையும், மோட்சத்தையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.
நரகத்திற்கும், சொர்கத்திற்கும் இடையே சிக்கி கொள்ளும் ஆன்மாக்கள் மிகுந்த வேதனைக்கு
ஆளகுமாம். இந்த ஆன்மாக்கள் தனக்கு நெருக்கமானவர்களிடம் தான் இருக்குமாம், சிலசமயம் அவை தாங்கள் இருப்பதாய் அவர்களுக்கு உணர்த்தும்.
வெளிபடுத்தும்
ஆன்மா
சிலசமயம் ஆன்மாவானது தன் குடும்பத்தினரின்
அமைதியை கெடுப்பதன் மூலம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்துமாம். சாஸ்திரங்களின்
படி இது பித்ரு தோஷம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பித்ரு தோஷத்தை நீக்க
இறந்தவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். இறந்தவரின் குடும்பத்தினர் இறந்த
ஆன்மாவின் கடைசி ஆசையை அவர் இறந்த 13 நாட்களுக்குள்
நிறைவேற்ற வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் மரணித்த ஆன்மாவானது அவர்கள்
குடும்பத்தினரை சுற்றியேதான் இருக்குமாம்.