இறைவனுக்கு ஏன் வாழைபழம் வைத்து வழிபடுகின்றோம் ?
கடவுளுக்கு பூஜை
என்று வந்துவிட்டால் பழவகைகளில் கடவுளுக்கு படைப்பது வாழைப்பழம் மட்டுமே. எவ்வளவோ
வகை பழங்கள் இருந்தாலும் வாழைபழத்தை மட்டும் படைப்பது ஏன் என்று எப்போதாவது
யோசித்திருப்போமா? கோவிலானாலும் சரி வீடானாலும் சரி பூஜையில் மற்ற எந்த பழ வகைகள்
இருக்கிறதோ, இல்லையோ வாழைபழம் மட்டும் கட்டாயம் இருக்கும். ஏன் வாழைபழத்தை மட்டும்
கடவுளுக்கு படைக்கிறார்கள் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.
முக்கனிகளான மா, பலா,
வாழை இவற்றில் வாழைக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. மா, பலா என்று இல்லை,
இயற்கையாக விளைந்த எல்லா வகையான பழங்களிலுமே கொட்டை இருக்கும். அப்படி கொட்டை
இல்லாத பழம் உண்டென்றால் அது மரபணு மாற்றப்பட்டதாக தான் இருக்கும். ஆனால்
இயற்கையாக விளையும் பழமான வாழைபழத்தில் கொட்டை என்பதே இல்லை. மாறாக அதில் சிறு கருப்பு
விதைகள் தான் இருக்கும்.
மற்ற எந்தப் பழமாக
இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை
எறிந்தால் மீண்டும் துளிர்க்கும். ஆனால், வாழைப்பழத்தை
உரித்தோ, முழுமையாகவோ வீசினால் கூட மீண்டும்
வாழைப்பழமானது மீண்டும் எந்த காரணத்தை கொண்டும் முளைப்பதில்லை.
எல்லா தெய்வங்களுக்கும்
தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் படைக்கிறார்கள். பூஜையில்
வாழைபழத்தை படைப்பதன் காரணம் அது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.
இறைவா! இந்த வாழைபழத்தை போல மீண்டும் பிறவாத நிலையைக் எனக்கு கொடு! எனக்கு
இப்பிறவியே போதும் இன்னொரு பிறவி வேண்டாம் என்ற வேண்டுதலை முன்னிறுத்தி
நமது முன்னோர்கள் கடவுளுக்கு வாழைப்பழத்தை படைத்தனர், நாமும் அதை பின்பற்றி
வருகிறோம்.
வாழைபழத்தை போலவே
பூஜையில் படைக்கும் தேங்காய்க்கும் அந்த இயல்பு உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில்
படாதவை. மற்ற எந்த பழத்தை சாப்பிட்டுவிட்டு கொட்டையைப் மண்ணில் போட்டாலும் அந்த
விதையிலிருந்து ஒரு மரமோ, செடியோ உண்டாகும். ஆனால், தேங்காயை
சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால்
அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து இருந்து மட்டும்தான் தான் தென்னை மரம் முளைக்கும்.
அது போல, வாழை மரத்திலிருந்து தான் வாழைக்கன்று
உருவாகும்.
பழம் கொட்டை என்பது
கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு படைபதற்க்கு உகந்ததாக நமது
முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.
இப்போது புரிகிறதா ஏன் வாழைபழத்தை பூஜையில் படைக்கும் வழக்கம் வந்ததென்று.