மதுரை மீனாட்சி அம்மனின் பெருமைகள்
மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை
மீனாட்சியம்மன் ஆலயமாகும். வருடம் முழுவதும் மீனாட்சியம்மனுக்கு திருவிழாக்காலம் தான்
என்றாலும், சித்திரைத்
திருவிழாவுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.
சித்திரை திருவிழாவின் போதுதான் மீனாட்சியம்மனின் பட்டாபிஷேகமும்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். அப்போது தான் கள்ளழகர்
பச்சைபட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குவார்.
அப்பேற்பட்ட சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் குறித்த
பல அபூர்வ தகவல்கள் இதோ,
மதுரை மீனாட்சி அம்மன் பற்றிய அபூர்வ தகவல்கள்
1. மீனாட்சியம்மனுக்கு ஒருவருடத்தில்
கிட்டத்தட்ட 274 நாள்கள்
திருவிழா நடைபெறும்.
2. ரிஷப
வாகனத்தில் எழுந்தருளும் சிவபெருமானை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது.
ஆண்டுமுழுவதும் நடைபெறும் வீதியுலாக்களில் மொத்தம் 16 முறை மட்டுமே சிவபெருமான் ரிஷப வாகனத்தில்
எழுந்தருளுகிறார். அந்த வகையல் சித்திரைத் திருவிழாவின் 2 மற்றும் 12-ம் திருநாள்களில் ரிஷபவாகனத்தில்
எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
3. சித்திரைத் திருவிழாவின் 4-ம் நாளில், சுவாமி, அம்பாளுடன் வில்லாபுரம் பாவக்காய்
மண்டபத்தில் எழுந்தருள்வார். பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் பெருமான், பக்தர்களின் பாவங்களைக்
காய்ந்துபோகச் செய்து நிவாரணம் அளிப்பதால் இது பாவக்காய் மண்டபம் எனப் பெயர்
பெற்றது.
4. மதுரையில்
ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்களான, வேடர்பறி லீலை, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் ஆவணி
மூலத் திருவிழாவின்போது செய்து காட்டப்படும்.
5. முன்பு திருச்சியைத்
தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த, திருமலை
நாயக்கருக்கு, மண்டைச்சளி
என்னும் நோய் வந்து அவரை மிகவும் வருத்தியது. ஒருநாள் அவரின் கனவில் ஒலித்த அசரீரி ஒன்று ‘மதுரைக்குப்
போய் திருப்பணிகள் செய்’ என ஒலித்தது. அந்த அசரீரி கூறிய வண்ணம் அவர் மதுரையில் திருப்பணி
செய்தார். இதனால் அவரை பிடித்திருந்த நோய் நீங்கியது. அதன்பிறகு அவர், மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி
செய்தார். திருமலை நாயக்க மன்னரின் ஆட்சியில் தான் கோயில் விரிவாக்கம் பெற்று, பொலிவுபெற்றது என, அங்குள்ள ஓலைசுவடுகள்
தெரிவிக்கின்றன.
6. திருமலை நாயக்கர்
காலத்துக்கு முன்புவரை, மீனாட்சி
சுந்தரேசுவரருக்குத் தைப்பூசத்தில் திருக்கல்யாண உற்சவமும் மாசிமாதத்தில்
தேரோட்டமும், மாசிமகத்தன்று
‘மீனாட்சி
பட்டாபிஷேகமும்’ நடைபெறும்
வழக்கம் இருந்ததாம்.
7. மீனாட்சியம்மன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின்
குலதெய்வம் என்பதால், பாண்டிய
மன்னர்களின் பூவான ‘வேப்பம்பூ’ மாலையானது பட்டாபிஷேகத்தின் போது சூட்டப்படுகிறது.
8. மீனாட்சியம்மன்
திருக்கல்யாணத்துக்கு பரம்பரை பரம்பரையாக மங்கலநாண் செய்து தரும் ஊர் 'திருமங்கலம்' ஆகும். அதே போல அன்னையின் விழிகளில் இடுவதற்கு மை கொண்டு தரும் ஊர் 'மையிட்டான்பட்டி' ஆகும்.
9. திருக்கல்யாணத்தில் திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்
பெருமாளே, மீனாட்சியின்
சகோதரராக வந்து அன்னையை சொக்க நாதருக்கு தாரை வார்த்துக் கொடுப்பார். ஆனால், புராணத்தின்படி, யுகப் பெருமாளாக வழங்கப்பெறும்
மதுரை கள்ளழக பெருமாள்தான். மீனாட்சிகோயிலிலும் புதுமண்டபத்திலும் உள்ள
தாரைவார்க்கும் சிற்பங்களில் இருப்பவர், கள்ளழகரே.
10. எல்லா ஊர்களிலும் திருக்கல்யாணத்துடன் சேர்ந்து சித்திரை திருவிழா நடைபெறும். ஆனால், மதுரையில் மட்டும்தான், அன்னை மீனாட்சி பட்டாபிஷேகம் முடிந்த பிறகு திருக்கல்யாண வைபவம் நடந்தேறும்.
10. எல்லா ஊர்களிலும் திருக்கல்யாணத்துடன் சேர்ந்து சித்திரை திருவிழா நடைபெறும். ஆனால், மதுரையில் மட்டும்தான், அன்னை மீனாட்சி பட்டாபிஷேகம் முடிந்த பிறகு திருக்கல்யாண வைபவம் நடந்தேறும்.
11. மதுரையில்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவும், திருக்கல்யாணத்தன்றும் சுமார் ஒரு
லட்சம் பேர் ஆண்டுதோறும் கல்யாண விருந்தில் கலந்துகொள்கின்றனர். அதற்காக, மாட்டுத்தாவணிச் சந்தை அன்றைய தினம், விருந்துப் பகுதி ஆகிவிடும். 500-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இதில்
ஈடுபடுவார்கள். விருந்து சாப்பிட்டு பக்தர்கள்
மொய்யும் எழுதிச் செல்கிறார்கள். ஓர் ஊரே, திருமண வீடாக மாறுவது இங்குதான்.
12. திருக்கல்யாணம் என்றால் குண்டோதரன் இல்லாமலா ‘குண்டோதரனுக்கு அன்னமிட்ட லீலை’ நிகழ்ந்த மேலச் சித்திரைவீதியில் உள்ள
அன்னக்குழி மண்டபம், தற்போது ‘பிர்லா விஸ்ரம்’ எனும் பெயரில் தங்குமிடமாகச்
செயல்பட்டு வருகின்றது.
13. நகரும்
கோயில் என்று
தேர்கள் சிறப்புப் பெறுகின்றன. எல்லா உற்சவ நாள்களிலும் நடை திறக்கப்பட்டிருக்கும்
மீனாட்சியம்மன் கோயில், திருத்தேரோட்ட தினத்தன்று மட்டும்
நடைசாத்தப்பட்டு இருக்கும்.
14. சுந்தரேசுவரர்
பெரிய தேரிலும், மீனாட்சியம்மன்
சிறிய தேரிலும் எழுந்தருள்வர்கள். இரு தேர்களிலும் சிவபுராணமும், திருவிளையாடல் புராணமும்
சிற்பங்களாய் இடம்பெற்றிருக்கும். ஓதுவார்கள், ‘சேந்தனார் திருப்பல்லாண்டு’ பாடியபடியே உடன் வருவர். அப்போதுதான் தேர்கள் நகரும் என்பது
ஐதிகம்.
15. தங்கக் குதிரையில் ஆற்றில் இறங்கும் கள்ளழகரை, வெள்ளிக் குதிரையில் வீரராகவப்
பெருமாள் வரவேற்பார்.
16. முற்காலத்தில்
நெற்கதிர் மண்டபங்கள்தான் கள்ளழகருக்காக அமைக்கப்பட்டன. ஒருமுறை அழகர்
எழுந்தருளியிருந்த மண்டபத்தில் தீப்பற்றிவிட, எல்லோரும் அழகரை விட்டு விட்டுத் தீயிலிருந்து தப்பி ஓடி
விட்டனர். அப்போது, வீரராகவப்பெருமாள்
கோயிலின் அர்ச்சகராக இருந்த அமுதவாணன் என்பவர் தன் உயிரைப் துச்சமென நினைத்து அழகரை
மீட்டுப் பாதுகாத்தார். தன் உயிரை பொருட்படுத்தாது அழகரைக் காத்த அந்த
அர்ச்சகருக்கு உரிய மரியாதை செய்ய மன்னன் உத்தரவிட்டபோது, குறுக்கிட்ட அர்ச்சகர் எனக்கு மரியாதை
வேண்டாம். நான் அனுதினமும் தொழும் என் பெருமாளுக்கு அந்த மரியாதையைத் தாருங்கள்
என்றார். இதனால்தான் ஆற்றில் இறங்கும் அழகரை வெள்ளிக் குதிரையில் வந்து
வீரராகவப்பெருமாள் வரவேற்று மரியாதைகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு இன்றுவரை
நடைபெறுகிறது.
17. சோழவந்தான் அருகே திருவேடகம் மற்றும் சமயநல்லூர் இடையே இருக்கும் தேனூரில்
உள்ள வைகையில்தான் காலங்காலமாக அழகர் ஆற்றில் இறங்குவார். வழியில் அழகருக்கு
அலங்காரம் செய்யப்படும் ஊர் அலங்காரநல்லூர், பின்னாளில் அலங்காநல்லூர் ஆனது. இவ்வூர் ஜல்லிக்கட்டுக்கு
புகழ்பெற்றது.
18. அழகர்மலையிலிருந்து மதுரைக்குப் புறப்படும்
கள்ளழகர், கள்ளழகர்
வேடம் பூண்ட பக்தர்கள் புடைசூழப் புறப்படுவார். கொண்டையிட்டு
, கொண்டையில்
குத்தீட்டி சொருகி, கரங்களில்
வளைதடி, வளரித்தடி மற்றும் சாட்டைக் கம்பு ஆகியன ஏந்தி, காதுகளில் கடுக்கன் அணிந்து கறுப்பு
வண்ண ஆடையோடு பக்தர்கள் ‘கள்ளர்’ வேடத்தில், அழகரோடு மெய்சிலிர்க்கப்
புறப்படுவர்.
19. மதுரைக்கு வரும் வழியில், பழைய காலத்துக் கல் மண்டபங்கள் மற்றும் தற்போது, வணிகர்கள், பக்தர்கள் அமைத்திருக்கும்
மண்டபங்கள் என மொத்தம் 400-க்கும்
மேற்பட்ட இடங்களில் அழகருக்கு என மண்டகப்படிகள் அமைக்கப்படுகின்றன.
20. மன்னர்
காலத்தில் அழகருக்கும், கோயிலுக்கும் பாதுகாவலாயிருந்தவர்கள் வெள்ளியங்குன்றம்
ஜமீன் வகையறாக்கள் ஆவார்கள். அதை நினைவுபடுத்தும் வகையில் வருடம் முழுவதும் நடக்கும்
உற்சவங்களில், கோயில்
சார்பாக உற்வசமூர்த்தி முன்னிலையில் ஜமீனுக்குப் பரிவட்டம் கட்டி மாலையணிவித்து
முதல்மரியாதை செய்யப்படுவது இன்றும் தொடர்கிறது.
21. அழகர்மலையில்
உள்ள உற்சவமூர்த்தியான கள்ளழகர் ‘அபரஞ்சி’ என்ற
ஒருவகை தங்கத்தில் ஜொலிக்கிறார். அழகர்மலையில் உள்ள நூபுரகங்கை தீர்த்தம் தவிர
வேறு தீர்த்தங்களில் அபிஷேகம் செய்தால் அவர்மேனி கறுத்து விடுமாம். திருவனந்தபுரத்துக்கு
பிறகு அழகர்கோயிலில் தான் அபரஞ்சி தங்கம் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
22. திருவிழாவில் அழகர் தங்கப்பல்லக்கு, தங்கக் குதிரை, கருட சேஷ வாகனம், கனக தண்டியல், பூப்பல்லக்கு ஆகிய வாகனங்களில்
எழுந்தருளுவார்.
23. மதுரைக்குள்
வரும்போது அழகரை, “வாராருஸவாராரு..அழகர்
வாராரு” என்று மேளதாளம்
முழங்க வரவேற்கும் மதுரை மக்கள், திருவிழா
முடிந்து, அழகர்மலை
நோக்கிப் புறப்படும் அழகரின் பிரிவுத் துயர் தாங்காது அழுதே விடுகின்றனர். இந்த
நிகழ்வின்போது, “போறார்
அழகர்.. போறாரே போறார்ஸ” என்ற
வர்ணனையும் பாடப்படுகிறது.
24. கள்ளழகர் ஊர்வலத்தில் வருகின்ற உண்டியல்கள் மொத்தம் 26 ஆகும். அதில், 8 மாட்டுவண்டி உண்டியல், 18 கைவண்டி உண்டியல்.
25. விரதமிருந்து
அழகரைச் சுமக்கும் சீர்பாதம் தாங்கிகள் மொத்தம் 100 பேர்.