-->

உங்கள் மூக்கு இதில் எந்த வகை என்று சொல்லுங்கள் - நீங்கள் எப்படிப்பட்டவர் என நாங்கள் சொல்கிறோம்


மூக்கு அமைப்பும் மற்றும் அதன் பலன்களும்


ஒரு பெண்ணின் அழகை முதலில் எடுத்துக் காட்டுவது அவளின் எடுப்பான, கூர்மையான மூக்கு தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

திருமணதிற்க்கு பெண் பார்க்கும் போது அந்த பெண் மூக்கும் முழியுமாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். பெண் பார்த்து வந்த பின் பெரியோர்களும் பொண்ணு அழகா மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கானு சொல்லுவாங்க. இதிலிருந்தே தெரிகிறது ஒரு பெண்ணுக்கு அழகை எடுத்துக் காட்டுவது மூக்குதான் என்று.


இறைவன் படைப்பில் பலருக்கு பல குறைகள் இருக்கிறது, உதாரணமாக கண் இருந்தும் பார்வை இல்லாமல் இருக்கிறார்கள், வாய் இருந்தும் குரல் இல்லாமல் இருக்கிறார்கள், காதுகள் இருந்தும் கேட்கும் திறன் இல்லாமல் இருக்கிறார்கள், அனால் மூக்கு இருந்தும் மூச்சு விடும் சக்தி இல்லாதவர்கள் இருக்கவே இயலாது.

பார்க்கும் திறன் பேச்சுத் திறன் கேட்கும் திறன் இல்லை என்றால் உலகில் உயிர் வாழலாம். ஆனால் சுவாசிக்காமல் யாரும் உயிர் வாழ இயலாது. அதன்படி மனித வாழக்கைக்கு மிகவும் முக்கியமான, அவசியமான, இன்றியமையாத ஒன்று மூக்காகும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மூக்கின் அமைப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்களை கொடுக்கிறது.

மூக்கு எப்படி இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.


நீளமான மூக்கு 


நீளமான மூக்கு இருப்பவர்கள் மிகவும் தைரியசாலியாகவும், யாருக்கும் எதற்கும் அஞ்சாதவர்களாகவும் இருப்பார்கள். எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் மனம் தளராமல் எதிர்த்து போராடுவார்கள்.
சிறிது முன்கோபம் அதிகம் உள்ளவராக இருந்தாலும் மனதில் எந்த வித சூது,வாது தெரியாதவர்களாக இருப்பார்கள். அனைவர் மீதும் அளவு கடந்த பாசத்துடன் இருப்பார்கள்.

குட்டையான குண்டான மூக்கு

எந்த வம்புக்கும், சண்டைக்கும் போகாதவர்கள், பிரச்சனையை கண்டு ஒதுங்கி இருப்பவர்கள். மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பாதவர்கள். கனவு உலகத்திலேயே மிதப்பவர்கள். நிஜத்தில் நடக்காததை கூட கற்பனையில் நடந்ததாக நினைத்துக் கொள்பவர்கள். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் கொண்டவர்கள். தைரியம் சற்று குறைவாகவே காணப்படும்.

நீளமான குண்டு மூக்கு

எந்த காரியத்தையும் பதராமல் நிதானமாக செயல்படுவார்கள். அந்த நிதானாத்திலே சில சமயம் நன்மையாகவும் பல சமயம் தீமையாகவும் இருக்கும். முயற்சியால் உண்டாகும் நன்மைகளை விட அதிர்ஷ்டத்தால் உண்டாகும் நன்மைகள் அதிகம். எந்த செயலையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

குட்டி மூக்கு

அடுத்தவர்களை குறை சொல்லியே காலத்தை ஓட்டுபவர்கள். சந்தேக புத்தி நிறைந்தவர்கள். நட்பு வட்டாரத்தினால் சில பாதிப்புகளை சந்திக்க நேரிடும். தனிமையை அதிகம் விரும்புபவர்கள். உறவினர்களின் உதவி சில நேரங்களில் கிடைக்கும்.கல்வியில் அதிக ஆர்வம் இருந்தாலும் கல்வியில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

கிளி மூக்கு

கர்வம் உள்ளவராக இருப்பார்கள். யாருக்கும் அடங்கி நடக்காதவராகவும் இருப்பார்கள். மனம் எப்போதும் அமைதியற்று இருக்கும் இதனால் புகழ் குறைந்து இருக்கும். எதையோ நினைத்து ஏங்கி கொண்டே இருப்பார்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு இருப்பார்கள். மகிழ்ச்சி கடலில் மிதந்து கொண்டிருப்பார்கள். புகழ்ச்சியை விரும்புபவர்கள். அடுத்தவர்கள் எப்போதும் தன்னை பாராட்ட வேண்டும் என்று நினைப்பார்கள்.
Previous Post Next Post