-->

சந்திராஷ்டமம் என்றால் என்ன ? சந்திராஷ்டமம் என்ன செய்யும் ? சந்திராஷ்டமம் பரிகாரங்கள்


சந்திராஷ்டமம் என்றால் என்ன?


பொதுவாக, சந்திரன் ஆனது நமது ராசிக்கு எட்டாம் இடத்திற்கு வரும் போது சந்திராஷ்டமம் உண்டாகிறது. சந்திராஷ்டமமானது ஒரு ராசிக்கு இரண்டே கால் நாட்கள் நீடிக்கும். சந்திராஷ்டமம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று தேய்பிறை சந்திராஷ்டமம் மற்றொன்று வளர்பிறை சந்திராஷ்டமம். இதில் தேய்பிறையை விட வளர்பிறை சந்திராஷ்டமம் அதிக பாதிப்பை உண்டாக்கும். இன்னும் சொல்லப்போனால் ஏழரை சனி தரும் பலனை அந்த இரண்டே கால் நாளில் சந்திரன் கொடுத்து விடுவார்.

சந்திராஷ்டமம் பரிகாரங்கள்

சந்திராஷ்டமம் நடைபெறும் நாட்களில் மன உளைச்சல், கோபம் போன்றவை அதிகம் ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லச்னத்திற்கு 8, 6, 12ல் சந்திரன் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டம நாட்களில் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்?


சந்திரன் எல்லாவற்றிற்கும் உரியவன். சந்திர பகவான் மனோகாரகன் எனவும் அழைக்கபடுகிறார். சந்திரன் மனசுக்கு உரியவன். நமது எண்ணம், மற்றும் செயல்களை கட்டுப்படுத்த கூடியவன். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது நம்மிடையே எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும். மனம் நிலையாக இருக்காது,அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றிலும் ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சந்திராஷ்டமத்தில் செய்யக் கூடாதவை



பிறருக்கு வாக்கு கொடுக்க கூடாது, புதிய முயற்சிகள் செய்யக் கூடாது, அதிக தொலை தூர பயணங்கள் செய்யக் கூடாது, சொந்தமாக வாகனம் ஓட்டக் கூடாது, அல்லது வாகனம் ஒட்டும்போதும் மிகுந்த கவனம் தேவை, வழக்கு தொடுப்பது, அறுவை சிகிச்சை செய்வது அன்றைய தினத்தில் கூடவே கூடாது. முடிந்தால் கிருஷ்ணா, ராமா என்று உங்கள் தினசரி வேலையை மட்டும் பொறுப்பாக பார்க்கலாம், அதில் தவறில்லை.

சந்திராஷ்டமம் யாருக்கெல்லாம் நன்மை செய்யும்?

சந்திராஷ்டமம் எல்லோருக்கும் கெடுத்த மட்டுமே செய்யுமா என்றால் அதுதான் இல்லை. கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது. அதற்கு காரணம் கடகம் சந்திரன் ஆட்சி பெறும் ராசி, ரிஷபம் சந்திரன் உச்சம் பெறும் ராசி. எனவே அந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையை மட்டுமே செய்வார்.

சந்திராஷ்டமம் நன்மைகள்

அதேபோல் சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திராஷ்டம தினத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதனால் சந்திராஷ்டமம் என்றால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று பொதுவாக சொல்லக் கூடாது.

சந்திராஷ்டமத்தில் இருந்து எவ்வாறு நம்மை காத்து கொள்வது?

சந்திராஷ்டம நாளில் எந்த செயலையும் ஆரம்பிக்கும் முன் நம்முடைய குலதெய்வம், நம் முன்னோர்கள், நம்முடைய இஷ்டதெய்வம் ஆகியோரை வணங்கிவிட்டு ஆரம்பிப்பது மிகவும் நல்லது. இப்படிச் செய்தால் நாம் தொடங்கும் எந்த காரியத்துக்கும் தடங்கல் ஏற்படாது.
Previous Post Next Post