-->

உங்களின் பிறந்த தேதியின் படி எந்த நிறம் உங்களுக்கு ராசியானது என்று தெரியுமா?

வாழ்க்கையை தீர்மானிக்கும் நிறங்கள்

நிறங்களானது நம்முடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது தோலின் நிறம், உடையின் நிறம், நாம் பயன்படுத்தும் பொருளின் நிறம் என அனைத்துமே நமது வாழ்வில் ஏதோ வித தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நம் எல்லோருக்கும் பிடித்த நிறம் ஒன்று இருக்கும். அதேபோல ராசியான நிறம் என்ற இருக்கும்.

எந்த ராசியினர் எந்த நிறம் உபயோகபடுத்த வேண்டும்


ஜோதிட விதிகளின்படி உங்களின் பிறந்த தேதிக்கென ஒரு ராசியான நிறம் இருக்கும். மிகவும் முக்கியமான காரியங்களுக்கு செல்லும்போது அந்த நிற உடையோ அல்லது பிற பொருட்களையோ பயன்படுத்தினால் அதன் மூலம் உண்டாகும் முடிவு உங்களுக்கு சாதகமாக மாறும். எப்படி நமது ராசிக்கு ராசியான நிறம் உள்ளதோ அதே போல உங்கள் பிறந்த தேதியின் படி ராசியில்லாத நிறமும் உண்டு. இந்த ராசியில்லாத நிற ஆடை அல்லது பிற பொருட்கள் பயன்படுத்துவது அந்த காரியத்தின் முடிவை உங்களுக்கு எதிரானதாக மாற்றும்.

சரி உங்கள் பிறந்த தேதிக்கான ராசியான மற்றும் ராசியில்லாத நிறம் எதுவென பார்ப்போம்.

பிறந்த தேதி 1, 10, 19, 28


இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். எனவே இவர்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்கள் மிகவும் ராசியானதாக இருக்கும். இந்த நிறங்கள் மனதைரியம், நேர்மை மற்றும் துணிச்சலை கொடுப்பதாகும். இந்த நிற உடை இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிக ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கும். ஆனால் இவர்கள் கருப்பு மற்றும் மெரூன் போன்ற நிறங்களை முடிந்தவரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் அவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது, மாறாக தீமைகள் மட்டுமே ஏற்படும்.

பிறந்த தேதி 2, 11, 20, 29 


இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திர பகவானின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இவர்களின் அதிர்ஷ்டமான நிறம் எதுவென்றால் பச்சை மற்றும் மஞ்சள் நிறமாகும். இவர்களுக்கு ராசியில்லாத நிறங்கள் சிவப்பு மற்றும் கருப்பு.

பிறந்த தேதி 3, 12, 21, 30 


இந்த தேதிகளில் பிறந்தவர்கள் குரு பகவானின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இவர்களின் ராசியான நிறம் ஆரஞ்சு மற்றும் பிங்க் ஆகும். அதே சமயம் இவர்களுக்கு ராசியில்லாத நிறங்கள் என்றால் அது கருப்பு, அடர் ஊதா மற்றும் அடர் பச்சை ஆகும்.

பிறந்த தேதி 4, 13, 22, 31 

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் குரு பகவானின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இவர்களின் ராசியான நிறம் நீலம் ஆகும், அதிலும் மெல்லிய ஊதா நிறம் இவர்களுக்கு வெற்றியை தேடித்தரும். இவர்களின் ராசியில்லாத நிறம் கருப்பு ஆகும்.

பிறந்த தேதி 5, 14, 23 

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புதன் பகவானின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். மற்றவர்களை எளிதில் கவர்ந்து இழுக்கும் இவர்களின் ராசியான நிறம் சாம்பல் ஆகும். இவர்களுக்கு ராசியில்லாத நிறங்கள் அடர் பச்சையும், அடர் சிவப்பும் ஆகும்.

பிறந்த தேதி 6, 15, 24 

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இவர்களின் ராசியான நிறம் அடர் பச்சை மற்றும் அடர் ஊதாவாகும். இவர்களுக்கு ராசியில்லாத நிறங்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் பிங்க் ஆகும்.

பிறந்த தேதி 7, 16, 25 

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கேது பகவானின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இவர்களின் பிறந்த தேதியின் படி இவர்களுக்கு ராசியான நிறங்கள் என்றால் அது வெள்ளை, மஞ்சள், மெல்லிய பச்சை, மெல்லிய ஊதா போன்றவையாகும். இவர்களுக்கு ராசியில்லாத நிறங்கள் என்றால் எந்த வகையான அடர் நிறமும் இவர்களுக்கு ஆகாது.

பிறந்த தினத்திற்கு ஏற்ற நிறங்கள்

பிறந்த தேதி 8, 17, 26 

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இவர்களுக்கு ராசியான நிற மஞ்சள் ஆகும். எந்த சூழ்நிலையிலும் மஞ்சள் நிறம் இவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும். அடர் பச்சை மற்றும் அடர் நீல நிறமும் இவர்களுக்கு ராசியாகும். ஆனால் இவர்களுக்கு ராசியில்லாத நிறம் என்றால் சிவப்பு ஆகும்.

பிறந்த தேதி 9, 18, 27 

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு ராசியான நிறம் எனில் அது சிவப்புதான். ராசியில்லாத நிறம் என்றல் வெள்ளை மற்றும் மெல்லிய நிறங்கள் இவர்களுக்கு ஆகாது.
Previous Post Next Post