அழகான முறுக்கு மீசை
தற்போதைய நாகரீக உலகில் ஃபேஷனானது
அதிகரித்து வருகிறது. அதிலும் இதுவரை உடைகள், ஹேர் ஸ்டைல், போன்றவற்றில் தான் ஃபேஷன் இருந்தது. இதுவரை ஆண்கள்
ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை மெலிதாக ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியுமாறு வைப்பது என்று இருந்தார்கள். ஆனால் இப்போது
நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடியை வைப்பதில் ஆண்கள் அதிக ஆர்வம் காட்டி
வருகின்றனர். இருப்பினும் எல்லோராலும் நல்ல அடர்த்தியான மீசை மற்றும் தாடியை வளர்க்க முடிதில்லை.
ஆண்களுக்கு அழகே மீசை தான். இன்றைய பெண்களுக்கு
அழகான மீசை மற்றும் தாடியை வைத்திருக்கும் ஆண்களைதான் விரும்புகிறார்கள். ஆனால்
சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரியான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே
அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்களுக்கென, மீசை மற்றும் தாடியை நன்கு வளர்வதற்கு என்ன செய்யலாம் என்பதை
பின்வருமாறு பார்ப்போம்.
அழகான மீசையை பெற எளிய வழிமுறைகள்
1. உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே,
மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி இருக்கும்.
எனவே உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோட்டீன் நிறைந்த
உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் முடியின்
வளர்ச்சியை அதிகரிக்கும்.
2. மீசை மற்றும் தாடி நன்கு அடர்த்தியாக
வளர வேண்டுமென்றால், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும்.
இதனால் குறிப்பிட்ட இடங்களில் முடியின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், ஷேவ் செய்ய செய்ய முடியின் வளர்ச்சியானது நாளைடவில் அதிகரிக்கும்.
3. மீசை மற்றும் தாடியை நன்கு
அடத்தியாக வளரச் செய்வதற்கு மிகவும் எளிதான ஒரு வழியென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வது தான். இதனால் அந்த
பகுதிகளில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முடியின் மயிர்கால்கள் வலுவாக மிக விரைவான வளர்ச்சி பெறும்.
4. டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் முடியின்
வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில்
குறைவாக இருந்தாலும், முடியின் வளர்ச்சியானது குறைவாக
இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் நிறைந்த உணவுகளான முட்டை,
மீன், கடல் சிப்பிகள்,
வேர்க்கடலை, எள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
5. உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது நச்சு பொருட்கள் இருந்தாலோ, அவை முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு
கிடைக்கப் பெறாமல் தடுக்கும். எனவே
நச்சு பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற ஒரு நாளைக்கு குறைந்ததபட்சம் 8 டம்ளர் தண்ணீரையாவது குடிக்க வேண்டும்.
6. தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள
பழுதுகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
7. ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10
நிமிடம் ஊற வந்தால், மீசை மற்றும் தாடி அடர்த்தியாக வளரும்.