-->

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்


நெல்லிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்பு போன்ற சுவைகளை அடக்கியது தான் நெல்லிக்காய். நெல்லிக்காயில் வேறு எந்த பழத்திலும் இல்லாத பல்வேறு அதிசியம் தரும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் c உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கிறது. தலை முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது. கண்பார்வை குறைபாட்டினை சரி செய்ய நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியை தந்து உடல் சூட்டை தணிக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் வயது முதிர்வால் ஏற்படும் சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றத்தை பெற முடியும். 

உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
நெல்லிக்காயை பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

நெல்லிக்காயில் உள்ள அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்து இருப்பதால், எலும்புகள் உறுதியடைகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை  அதிகரிக்கவும் நெல்லிக்காய் பயன்படுகிறது.

நெல்லிக்காயின் மருத்துவப் பயன்கள்

நெல்லிக்காய் ஊறுகாய்
  • அல்சர் நோய் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் அல்சரை விரைவில் குணப்படுத்தி விடலாம்.
  • உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கவும், சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் பயன்படுகிறது.
  • நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் ஜாம் என பலவிதமாக நாம் சாப்பிட்டு வருவதால் உடல் ஆரோக்கியம் பெருகும்.
  • தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவதின் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம்.
  • கொட்டை நீக்கப்பட்ட  நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.
  • நெல்லிக்காயை அரைத்து தலைமுடியில் தடவி குளித்து வந்தால் நரை முடி வருவதை தடுக்கலாம்..
  • நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
  • நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
  • காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
  • நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினாவை பாதுகாக்கும். இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், பார்வை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை தடுக்கப்படும்.
  • இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
  • நெல்லிக்காய் கசப்பாக இருந்தாலும், இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், முடி பிரச்சனைகள், சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும். 
  • ஒரு பிடி நெல்லக்காய் இலைகளை 1 ½ லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதைப் பொறுக்கும் சூட்டில் வாயில் ஊற்றிக் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் முற்றிலும் மறைந்து விடும்.
  • நெல்லிக்காய் இலைகளை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி அதை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து தினமும் அந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வு,நர முடி,இளநரை போன்ற பாதிப்புகள் ஏற்படாது.


Previous Post Next Post