-->

தினமும் தேங்காய் உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள்


தேங்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இறைவனுக்கு வைக்கப்படும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று தேங்காய். அப்படிப்பட்ட தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தேங்காய் மருத்துவத்திற்காக மட்டுமல்லாமல் நம் சமையலிலும் சிறந்த உணவு பொருளாக பயன்படுகிறது.

தேங்காய் பால் உணவுகள்
இயற்கை மருத்துவங்களில் தேங்காய் முக்கிய உணவு மற்றும் மருந்துப் பொருளாக பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டக் கூடிய 'மோனோலோரின்' எனும் பொருள் தேங்காயில் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் கொழுப்பைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

உடல் சூட்டைத் தணித்து, உடலைக் குளிர்ச்சியாக வைக்க தேங்காய் மிகவும் பயன்படுகிறது. வயிற்றுப் புண் ஆற, தேங்காய்ப் பால் மிக சிறந்த மருந்தாகும். வாய்ப்புண் உள்ளவர்கள் தேங்காய்ப் பால் குடித்து வந்தால் விரைவில் குணமடையும்.

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரம் ஒருமுறை  தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து, ஊற வைத்து குளித்து வந்தால் முடி நன்கு வளரும் பொடுகுத்தொல்லை நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். முடி உதிர்வு நின்று விடும்.

தேங்காயின் மருத்துவப் பயன்கள்

தேங்காய் எண்ணெய் பயன்கள்

  • தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.
  • தேங்காய் பாலை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் எடையை குறையும்.
  • தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையான சத்து தேங்காயிலும் நிறைந்துள்ளது.
  • தீப்புண் ஏற்பட்ட இடத்தில தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
  • முடியின் வளர்ச்சிக்கும், வறண்ட முடியை சரி செய்வதற்கும், தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.
  • கொசு மற்றும் பூச்சிக் கடிக்கு மருந்தாக தேங்காய் எண்ணெய் செயல்படுகிறது
  • தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.
  • தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களை குணமாக்க பயன்படுகிறது.
  • குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் நிறைந்துள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் விரைவில் குணமடையும்.
  • கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது..
  • தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது.
  • வயிற்று புண், குடல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்திற்கும் தேங்காய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.


Previous Post Next Post