-->

கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


கொத்தவரங்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

நமது உணவில் பல்வேறு வகையான காய்கறிகளை சாப்பிட்டு வருகிறோம். அனால் ஒரு சில காய்கறிகளை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. அதற்க்கு காரணம் அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியாமல் இருப்பது தான்.

அப்படி நாம் விரும்பி சாப்பிடாத ஒருசில காய்கறிகளில் கொத்தவரங்காயும் ஒன்று. கொத்தவரங்காயில் பல்வேறு நன்மை தரக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை விரைவில் குறைந்து விடும்.

கொத்தவரங்காய் நன்மைகள்

கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இது பல்வேறு நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கும்.

கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளது. எனவே தினமும் உணவில் கொத்தவரங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். கொத்தவரங்காய் காயவைத்து வற்றலாகவும் பயன்படுகிறது.

கொத்தவரங்காய் மருத்துவப் பயன்கள்

கொத்தவரங்காய் பொரியல்

  1. கொத்தவரங்காயில் உள்ள கிளைக்கோ நியூட்ரியன்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றன.
  2. கொத்தவரங்காயில் உள்ள கால்சியமானது எலும்புகளை பலப்படுத்தி எலும்புகள் தேய்மானம் அடைவதை தடுக்கிறது.
  3. கொத்தவரங்காயில் காணப்படும் நார்ச்சத்தானது இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைக்கிறது.
  4. உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் தடுக்கப்படுகின்றன.
  5. கொத்தவரங்காயில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்கிறது.
  6. கொத்தவரங்காயில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
  7. இதில் உள்ள ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகள் இல்லாமல் வளர உதவுகிறது..
  8. இரைப்பை மற்றும் குடல்களை சீராக இயங்க வைத்து செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது. 
  9. சருமப் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக கொத்தவரங்காய் பயன்படுகின்றது.
  10. கொத்தவரங்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைவதற்கு பயன்படுகிறது.


Previous Post Next Post