-->

மூல நோயை குணபடுத்தும் கருணை கிழங்கின் மருத்துவ குணங்கள்


கருணை கிழங்கின் மருத்துவ குணங்கள்

கருணை கிழங்கானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதை பொரித்தோ, கூட்டு செய்தோ, வறுத்தோ உண்ணலாம். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணை கிழங்கு அதிகம் பயன்படுகிறது.

1. பல்வேறு நன்மைகளை கொண்ட கருணை கிழங்கு, பெண்களுக்கு மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்தத்தை சமன்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.

2. கருணை கிழங்கில் புரதம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. மாரடைப்பு, கேன்சர் வராமல் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

3. கருணைக்கிழங்கை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். கருனைகிழங்கை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், அல்சர் குணமாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். குடல் புண், வயிற்று புண்களை ஆற்றும்.
4. கருணை கிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் எரிச்சலை போக்குவதற்கு புளி அல்லது மோர் சேர்த்து வேகவைத்தால் எரிச்சல் இருக்காது.

5. கருணை கிழங்கு நார்ச்சத்து உடையது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருணை கிழங்கு லேகியம் மூலநோய்க்கு மருந்தாகிறது.

6. கருணை கிழங்கை கொண்டு மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தாயாரிக்கலாம். வேகவைத்து மசித்த கருணைக்கிழங்கு பசை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து கலந்து மாதவிலக்கு முன்பு சாப்பிட்டுவர கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்றவை வராமல் இருக்கும்.

7. கருணைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துவர பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பெண்கள் இதை உணவில் எடுத்துக்கொள்வதால், மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளை போக்கும். வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை தடுக்கிறது. உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலம் கொடுக்கும்.

கருணை கிழங்கு மசியல்

8. கருணைகிழங்கு மலசிக்கலை போக்கும் தன்மையுடையது. நாட்பட்ட காய்ச்சலுக்கு ஒரு சிறந்த மருந்தாக கருனைகிழங்கு விளங்குகிறது.

9. ஜீரண மண்டல உறுப்புக்கள் சரியாக வேலை செய்ய வைக்க கருணை கிழங்கு உதவுகிறது.


Previous Post Next Post