-->

பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


பப்பாளி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

விலை குறைவான மிகவும் ருசியான அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு பழம் தான் பப்பாளி. பப்பாளி பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. அதன் ருசி அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும்.

பப்பாளி பயன்கள்

பப்பாளி பழம் சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படாமல் நமது சருமத்தை பளிச்சிட வைப்பதற்கும் பயன்படுகிறது. பப்பாளி இலை, பப்பாளி காய், பப்பாளி பழம் என அனைத்து பாகங்களும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

கண்களில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்ய பப்பாளி பழம் மிகவும் பயன்படுகிறது.பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடல் வளர்ச்சியில் நல்ல மாற்றம் உண்டாகும்.
பப்பாளி எலும்புகளை வலுப்படுத்துகிறது. 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வரம் ஒரு முறை பப்பாளி காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்து நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற முடியும்.

பப்பாளி காய் கூட்டு

தினமும் இறந்து பப்பாளி காய் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். நரம்பு தளர்ச்சி பிரச்னையை போக்க தினமும் காலையில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறைபாடு சீக்கிரத்திலேயே நீங்கும்.

பப்பாளி பழம் ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

பப்பாளியின் மருத்துவப் பயன்கள்

பப்பாளி பழம் ஜூஸ்

  • பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் தொடர்ந்து தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறி விடும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
  • பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூசினால் புண்கள் உடனே ஆறும்.
  • பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வந்தால் புண்கள் இருந்த இடம் தெரியாமல் ஆறிவிடும்.
  • பப்பாளி இலைகளை அரைத்து கட்டி உள்ள இடத்தின் மேல் வைத்து கட்டு போட்டு வர கட்டி உடைந்து சரியாகி விடும்.
  • பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் இருந்தால் அதன்மேல் பூசி வந்தால் வீக்கம் விரைவில் கரைந்து விடும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் விஷம் எளிதில் இறங்கி விடும்.
  • பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், பால் நன்றாக சுரக்கும்..
  • கல்லீரல் வீக்கம் உள்ளவர்கள் பப்பாளி காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறைந்து விடும்.
  • பப்பாளிப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.
  • நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் வெந்நீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
  • வாரம் இருமுறை பப்பாளி சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாது..
  • மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.



Previous Post Next Post