பெண்களுக்கு மீசை வளராமல் இருக்க செய்ய வேண்டியவை
பெண்கள் தங்களை எப்போதும் அழகாக வைத்து
கொள்ளவே விரும்புவர். இதற்காக சிலர் இயற்கை முறைகளையும், சிலர் செயற்கை
முறைகளையும் கையாள்கின்றனர். தங்களை அழகுபடுத்தி கொள்ள தனியாக மாத பட்ஜெட்ல் ஒரு
தொகையை ஒதுக்குவோரும் உண்டு. ஆனால் ஒரு சில சமயங்களில் அவர்கள் எவ்வளவு முயற்சி
செய்தாலும் அதற்கு நிரந்திர பலன் கிடைக்காமல் போவதுண்டு. அவற்றில் ஒன்று ஆண்களைப்
போல முகத்தில் முடி வளர்வது. இது முகத்தோடு முடியாமல் கை, கால் போன்ற இடங்களிலும் ஆண்களைப் போல பெண்களுக்கு முடி வளர்வது ஒரு
மிகப் பெரிய தாழ்வு மனப்பான்மையை அவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.
இதற்காக அவர்கள் அடிக்கடி அழகு
நிலையங்களுக்கு சென்று முடியை எடுத்து விடுகிறார்கள். ஆனால் இது மிக பெரிய
தவறாகும். இதனால் முடி வளர்வது முன்பை விட முடி இன்னும் வேகமாகும். அதோடு
தொடர்ந்து அழகு நிலையங்களுக்கு சென்று முடியை எடுத்து வந்தால் அதனால் தோலுக்கும்
ஆபத்து வரலாம். அதாவது தோல் தடித்து தனது அழகை முழுவதுமாக இழந்து விடும். பிறகு
இதற்கு என்ன தான் தீர்வு என்று தெரிய வேண்டுமா, தொடர்ந்து படியுங்கள்.
‘ப்யூனிக்’ என்ற ‘ஒரு கல் உள்ளது. அது பார்ப்பதற்கு கொஞ்சம்
சொர சொரப்பாக இருக்கும். இது அழகுக் சாதன பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.
அந்தக் கல்லினால் உடம்பைத் தேய்த்து வந்தால், முடி வளர்ச்சி தடைபட்டு, நாளடைவில் தோல்
மிகவும் வழ, வழப்பாக மாறிவிடும். ஒரு வேளை இந்தக்
கல் கிடைக்கவில்லை என்றால் சுரக் குடுக்கையை உலர வைத்து, அதனை உடம்பில் தேய்த்தாலும் முடி வளர்வது குறையும்.
இது தவிர நீராவி குளியல் எடுக்கலாம்.
இந்த நீராவி குளியல் பல வழிகளில் நன்மைகளை செய்யக் கூடியது. நீராவி குளியல் சரும
வியாதிகளைப் போக்கும் என்று அண்மைக் காலமாக நம்பப்படுகிறது.
வெயில் காலங்களில் அதிக அளவில் வியர்வை
வெளியாகும். அந்த சமயத்தில் அதில் இருக்கும் நீர் ஆவியாகி விடுகிறது. வியர்வையில்
உள்ள உப்புக்கள், உடம்பின் மேல் பகுதி தோலின் மீது
படிந்து விடுகிறது. இதனால் தோல் சொர சொரப்பாக ஆகி விடும். அதனால் தோலின் இயற்கைச்
சுரப்பியான எண்ணெய்ப் பசையானது மேலே வர முடியாதபடி துளைகள் அடைத்துக்
கொண்டு விடும். இந்த நிலையில் அடிக்கடி நீராவி குளியல் செய்தால் அத்துளைகள் நன்றாக
விரிந்து கொடுக்கும், தோலும் சொரசொரப்பாக இருக்காது.
மெருகுடன் காணப்படும். தேவையற்ற முடிகளும் வளர்வது தடைபடும்.