சுரைக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள
விரும்பும் அனைவருக்கும் ஒரு சிறந்த காய்கறி என்னவென்றால் அது சுரைக்காய் தான். சுரைக்காய் அதிகப்படியான
நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்து காணப்படும் ஒரு
உணவுப் பொருளாகும். சுரைக்காயின்
பாகங்களான இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் குணம்
கொண்டவையாகும்.
சுரைக்காயில் நமது உடலுக்கு தேவையான
அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும்,
0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் இருக்கின்றன.
இவை அனைத்தும் உடல் நலத்திற்கு மிகவும் நன்மையை கொடுக்கிறது.
உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை
தவிர்க்க சுரைக்காய் பயன்படுகிறது. சரும பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்க
மிகவும் உதவுகிறது. உடலுக்கு பளபளப்புத் தன்மையை கொடுக்கிறது.
சிறுநீர் வெளியேறாமல்
சிரமப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாகும். சிறுநீரகக் கோளாறு
உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு
தேக்கரண்டி எலுமிச்சை சாரையும் சேர்த்து அருந்தினால் சிறுநீரகம் சம்பந்தமான
பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும்
சிறந்த மருந்தாக சுரைக்காய் பயன்படுகிறது. சுரைக்கையில் உள்ள நீர்ச்சத்து
கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து கண்களை பாதுகாக்கிறது.
மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய்
சிறந்த மருந்துவ உணவாக பயன்படுகிறது. சுரைக்காயை வாரம் ஒரு முறை சாப்பிட்டு
வந்தால் மலச்சிக்கல், மூல நோய் போன்றவைகள் விரைவில்
குணமடையும்.
சுரைக்காயின் மருத்துவ பயன்கள்
- சுரைக்காயை கூட்டு, பொரியல், குழம்பு என ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
- சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
- சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் விரைவில் குணமடையும்.
- சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.
- பெண்களுக்கு உண்டாகும் இரத்த சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
- குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.
- சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும்.
- தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்த்து இரவில் படுக்கப் போகும் முன்பு தலைமுடிகளில் மசாஜ் செய்ய வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேர்ந்து ஊறும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும்
- சுரைக்காயானது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
- உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையைக் குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.
- கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக சுரைக்காய் பயன்படுகிறது.