-->

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்


வாழைத்தண்டு மருத்துவ பயன்கள் 

சிறுநீர் சம்பந்தமான நோய்களால் துன்பப்டுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. நம் உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலமே வெளியேற்றபடுகின்றது. சிறுநீரை அடக்கி வைத்தாலோ அல்லது வேறு எதாவது நோய் பாதிப்பாலோ சீறுநீரானது உடலை விட்டு வெளியேறாமல் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

வாழைத்தண்டு கூட்டு
இந்த பிரச்சனைகளில் முதன்மையானது சீறுநீரகத்தில் கல் உருவாவது. அதிக காரமான உணவு, குறைவாக நீர் அருந்துதல், வறண்டு போன உணவு, மது அருந்தும் பழக்கம் போன்றவையும் சீறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்கள் ஆகும். சீறுநீரகத்தில் கல் உருவானால் அடி முதுகு பகுதியில் கடுமையான வலி ஏற்படும். அது சில சமயம் அறுவை சிகிச்சை வரை செய்யும் அளவுக்கு சென்று விடுவதும் உண்டு.

சீறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மாத்திரைகளும் தினமும் சாப்பிடுபவர் பலர் உண்டு. இதற்காக பல ஆயிரம் முதல் லட்சம் வரை செலவு செய்வோரும் உண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமல் நாம் உண்ணும் உணவு மூலமே சீறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க முடியும்.

அந்த வகையில் வாழைத்தண்டுக்கு சீறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை நாம் உணவில் அடிகடி சேர்த்து கொண்டால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாக கரைத்து விடலாம். சீறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

நார்ச்சத்து அதிகம் கொண்டது வாழைத்தண்டு. அதிக உடல் எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் கொண்டவர்களுக்கு இது கண் கண்ட மருந்து. இது இரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

வாழைத்தண்டு குளிர்ச்சி தன்மை கொண்டது. உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது என்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. சீராக கற்களை மட்டும் கரைக்காமல் வயிற்றில் உள்ள புண்களையும் குணமாக்கும் சக்தி கொண்டது வாழைத்தண்டு.

வாழைத்தண்டு மருத்துவ பயன்கள்

உடல் எடையை குறைய உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.  

Previous Post Next Post