-->

வெயிலே தெரியாம ஜில்லுனு இருக்க புதினா மிளகு கருப்பட்டி ஜூஸ்


உடலை குளிர்ச்சியாக்க ஒரு அருமையான ஜூஸ் 


உடல் சூட்டை குறைக்கும் புதினா மிளகு கருப்பட்டி ஜூஸ்
வெயிலின் தாக்கத்தை சமாளித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள புதினா ஒரு சிறந்த பொருளாகும். புதினா நம் உடலை குளிர்ச்சியாக வைப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கிறது. உடல் சோர்வடைவதை தவிர்க்கிறது. உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

புத்துணர்ச்சி தரும் புதினா

தேவையான பொருட்கள்


புதினா - 1 கைப்பிடி
மிளகு – ½ ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை பழம் - பாதி
கருப்பட்டி - சுவைக்கு
செய்முறை :
புதினாவை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும்.
மிச்சியில் சுத்தம் செய்த புதினா, இஞ்சி, எலுமிச்சை சாறு, மிளகு , கருப்பட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த ஜூஸை வடிகட்டினால் குளுகுளு புதினா மிளகு கருப்பட்டி ஜூஸ் ரெடி.


Previous Post Next Post