-->

இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்


இளநீர் மருத்துவ நன்மைகள்

கோடை காலம் வந்தாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இளநீர் தான். எவ்வளவு செயற்கையான பானங்கள் வந்தாலும் இயற்கையாக விளையும் இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் மக்கள் இதனை அதிகம் விரும்பி அருந்துகின்றனர். இளநீரானது தாகத்தை தணித்து புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல் பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது. 
இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவை இயற்கையிலேயே கிடைக்கிறது. 



வயிற்றுப்போக்கு 
வயிற்றுக் போக்கு பிரச்சனை இருக்கும்போது உடலில் நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால் இழந்த நீர்சத்தை திரும்ப பெற இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. 

எடை குறைவு 
இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் இளநீரை பருகும்போது வயிறும் நிறைந்து போவதால், தேவையற்ற உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது. 

நீரிழிவு 
இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், நீரிழவு நோய் உள்ளவர்கள் இளநீர் பருகுவது மிகவும் நல்லது. 

வைரஸ் நோய்கள் 
விஷ காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ், இவை இரண்டுமே சில வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால் வைரஸ் கிருமிகள் தாக்குதலில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. 


இரத்த அழுத்தம் 
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் ல்ல மருந்தாக அமைகிறது. 

சிறுநீரக கற்கள் 
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும். 

சரும பிரச்சனைகள் 
முகத்தில் ஏற்படும் பருக்கள்,  புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை போன்ற இடங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவிவிட்டு காலையில் கழுவ வேண்டும். இதனை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும். 

புற்றுநோய் 
சில ஆய்வுகளின்படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக போராடும். 

கொலஸ்ட்ரால் 
மிருகங்களை வைத்து செய்த ஆராய்ச்சிகளின் படி, இளநீர் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறதாம். ஆனால் மற்ற பானங்களை விட இளநீர் பருகுவது உடம்புக்கு மிகவும் நல்லது என்பது உறுதி. 

அழகான சருமம்

இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்கள் உள்ளன. இந்த கனிமங்கள் ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாக உள்ளன. ஆகவே சருமம் அழகாக பொலிவுடன் இருக்கும்.


Previous Post Next Post