முகம் பளிச்சிட
கொய்யா பழத்தை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. கொய்யா பழம் விலை குறைவானதும் எளிதில் அனைவராலும்
வாங்க கூடிய பழமாகும்.
கொய்யா பழம்
உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. கொய்யாவில் உள்ள விட்டமின்
சத்துக்கள் உடலுக்கு பளபளப்புத் தன்மையை கொடுக்கிறது. கொய்யாவில் வைட்டமின் சி,
பி மற்றும் ஏ ஆகிய
சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. கொய்யா பழத்தை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல்
முகத்தை அழகுபடுத்தவும் பயன்படுகிறது.
முகத்தை பளபளப்பாக்கும் கொய்யா ஃபேஸ் பேக்
கொய்யாவின் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்
அதிக அளவில் உள்ளன. இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும். சருமத்தை தளர்த்தி
மென்மையாக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஃபேஸ் பேக் தயாரித்து வாரம் ஒருமுறை
பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்.
சருமம் அழகை அதகரிக்க
தேவையானவை:
தேன் - 1 தேக்கரண்டி
கொய்யா பழத்தின்
தோல்
செய்முறை
முதலில்
கொய்யாப்பழத்தின் தோலை சீவி எடுத்துக் கொண்டு அந்த தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள
வேண்டும். இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு
தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம்
கழுவவேண்டும்.
சருமத்தை பளபளப்பாக்குவதற்கு
கொய்யாவிலுள்ள
வைட்டமின்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தை
அளிக்கும். முகத்திற்கு பொலிவான தோற்றத்தை அளிக்கும். .
தேவையானவை
தண்ணீர் - 1 கப்
கொய்யா - 1
செய்முறை:
கொய்யாப்பழத்தை
சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நீர்
கலந்து பசைபோன்று தயாரிக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால்
கழுவவும்.