-->

விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 முக்கியமான காரணங்கள்


விந்தணு குறைபாடு

இன்றைய தலைமுறை இளைஞர்கள் சந்திக்கும் தலையாய பிரச்சனை விந்தணு குறைபாடு. விந்தணு குறைபாட்டால் ஆண்கள் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எதனால் இந்த விந்தணு குறைபாடு ஏற்படுகிறது என்று தெரியாமல் கண்டகண்ட மருந்துகளையும் மாத்திரைகளையும் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் உடலுறவில் போதிய விருப்பம் இல்லாமல் உள்ளனர். பொதுவாக விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கு நாம் வாழும் நடைமுறை வாழ்க்கை தான் பெரும் காரணமாக அமைகிறது. எப்படி நம் வாழ்க்கை சூழல் காரணமாக விந்தணு குறைபாடு ஏற்படுகிறது என்பதை பின்வருமாறு பாப்போம்.


விந்தணு குறைபாடு ஏற்பட காரணங்கள்

வெந்நீர் குளியல்

பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகமாக உள்ளது, அல்லது வெந்நீரில் குளித்தால்தான் நல்லது என கூறி வெந்நீரில் குளிப்பார்கள். வெந்நீரில் உள்ள அவ்வாறு அதிகப்படியான வெப்பம் காரணமாக விந்தணுவின் தரம் குறைவதோடு, அதன் உற்பத்தியும் பாதிக்கப்படும். எனவே குளிக்கும் போது சாதாரண நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.

உள்ளாடை

ஆண்கள் அணியும் உள்ளாடையானது மிகவும் இறுக்கமானதாக இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் ஆண் விதையானது அதிக வெப்பத்தால் வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே முடிந்தவரை தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.

மொபைல் போன்

பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பார்கள். அவ்வாறு வைக்கும்போது மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு பெரும் பிரச்சினையாக அமைவதோடு மட்டுமல்லாமல் அதன் உற்பத்தியின் அளவைக் பெருமளவு குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினாலும், விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம்

அலுவகத்தில் உள்ள பிரச்சனைகள் காரணமாக பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. மன அழுத்தமானது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைபாடு. சில சமயங்களில் இவை ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா,  தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

போதிய உடலுறவு இல்லாமை
உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு குறைபாடு. எனவே அவ்வப்போது உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து  விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் அதிகம் உள்ள பானங்களை அதிகம் பருகினால், அவை உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹால் உள்ள பானங்களை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடித்தல்

சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். எனவே சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

சோயா பொருட்கள்

ஆண்கள் சோயா நிறைந்த பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும்.

எண்ணெய் பொருட்கள்

எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும்.

மடிக்கணினி

தற்போது மடிக்கணினி எனப்படும் லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. ஆண்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளியாகும் அதிகபடியான வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

Previous Post Next Post