ஆடி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்
ஆடி மாதம் என்றாலே
நினைவுக்கு வருவது வழிபாடும், விரதங்களும் தான். மற்ற மாதங்களை விட ஆடி மாதத்தில்
தான் அதிக விரத நாட்கள் கடைபிடிக்கபடுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதம்
ஆகும். அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அம்மன் கோவில்களில்
அம்மனுக்கு கூழ் ஊற்றுதால், காப்பு கட்டுதல், தீ மிதித்தல், தீ சட்டி எடுத்தல், மாவிளக்கு
போடுதல், பொங்கல் வைப்பது போன்ற பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும்.
ஆடி மாத விரத நாட்கள்
ஆடி கிருத்திகை
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை
நட்சத்திரம் வரும் நாள் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை
நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. இந்த வருடத்திற்கான ஆடி கிருத்திகை, ஆடி மாதம் 10-ம் தேதி ( 26.07.2019)
அன்று வருகிறது. இது
முருகனுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் அம்மனையும், முருகனையும் சேர்ந்து வழிபடுவது
சிறந்ததாகும்.
ஆடி அமாவாசை
ஒவ்வொரு மாதமும்
அம்மாவாசை அன்று நம் முன்னோர்களை வழிபடுவது வழக்கமாகும். ஆடி மாதத்தில் வரும்
அம்மாவசை அன்று அம்மனையும், நம் முன்னோர்களையும் சேர்த்து வழிபடுவதால் கூடுதல்
சிறப்பாக அமைகிறது. ஆடி மாத அம்மாவசை ஆடி
மாதம் 15-ம் தேதி ( 31.07.2019)
அன்று கடைபிடிக்கபடுகிறது.
ஆடி பதினெட்டு
ஆடி மாதம் 18-ம் தேதி (03.08.2019) அன்று ஆடி 18 வருகிறது. தமிழகத்தில் நீர்ப் பிடிப்புப்
பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி
பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று
கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் சுமங்கலிகள் தாலி கயிறை மாற்றுவார்கள்.
அம்மனுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள்.
வரலட்சுமி விரதம்
ஆடி மாதம் 24-ம் தேதி (09.08.2019) அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெண்கள் அனைவரும் தன்
கணவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று உள்ளம் உருகி அம்மனை வேண்டி வழிபட
வேண்டும். இந்நாளில் இல்லத்திற்கு வரும் அனைத்து சுமங்கலி பெண்களுக்கும்
குங்குமம், தாலிச்சரடு, பூ, தாம்பூலம்
கொடுப்பது சிறந்தாதாகும். இவ்வாறு செய்தால் தீர்க்க சுமங்கலியாக இருக்க அம்மனின்
அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.