-->

ஆயக்கலைகள் 64 என்றால் என்ன? அவை என்னென்ன?


ஆயக்கலைகள் என்றால் என்ன?

கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் 64ற்க்கும் அதிபதியாவாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் மட்டுமே ஆயக்கலைகள் அனைத்தினையும் கற்று அறிந்திட முடியும் என்பதே உண்மை. சரஸ்வதி தேவியை வணங்கிட இந்த 64 கலைகளும் சித்தியாகும் என்பது முன்னோர்கள் வாக்கு. இப்படி பலரும் சிறப்பித்து கூறும் இந்த ஆயகலைகள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது. வாருங்கள் அவை என்னென்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

ஆயக்கலைகள் எத்தனை வகைப்படும்?



1. அக்கரவிலக்கணம் (எழுத்து இலக்கணம்)

2.
இலிகிதம் (எழுத்தாற்றல்)

3.
கணித வல்லமை

4.
வேதங்கள் அனைத்தையும் குறை இன்றி அறிதல்

5.
புராணங்களை அறிதல்

6.
வியாகரணம் (இலக்கண அடிப்படையில் பேசுதல் அல்லது கவிதைதுவமாக பேசுதல்)

7.
நீதி சாஸ்திரம் (குற்றத்தை உணர்ந்து நேர்மையான சரியான தண்டனை தருதல்)

8.
ஜோதிட சாஸ்திரம் (ஜோதிடக் கலையில் வல்லமை)

9.
தர்ம சாஸ்திரம் (அனைத்து வகை தர்மங்களையும் அறிதல்)

10.
யோக சாஸ்திரம் (யோக கலைகள்)

11.
மந்திர சாஸ்திரம் (மந்திரக் கலை)

12.
சகுன சாஸ்திரம் (சகுனங்களை கொண்டு நடக்கப்போவதை உணர்தல்)

13.
சிற்ப சாஸ்திரம் (சிலைகளை வடித்தல்)

14.
வைத்திய சாஸ்திரம் (மருத்துவ முறைகளை அறிதல்)

15.
உருவ சாஸ்திரம் (ஒருவர் உடலில் உள்ள முடி, பல் போன்ற அவர்களுக்குடைய உடலுடன் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு சிறிய பொருளை வைத்து அவர்களின் உருவத்தையே கணித்து விடுவது அல்லது வரைந்து விடுவது)

ஆயக்கலைகளுக்கு அதிபதி


16.
இதிகாசம் மற்றும் இசை தாளங்கள் அறிதல்

17.
காவியம் படைத்தல்

18.
அலங்காரக் கலை

19.
மதுரபாடனம் (இனிமையாக பேசி மயக்குதல்)

20.
நாடகம் எழுதுதல்

21.
அனைத்து வகை நாட்டியம் அறிதல்

22.
சத்தப்பிரமம் (ஒலி நுட்ப அறிவு)

23.
வீணை வாசித்தல்

24.
வேணு வாசித்தல் (புல்லாங்குழல் வாசித்தல்)

25.
மிருதங்கம் வாசித்தல்

26.
சமையல் கலை அறிதல்

27.
அத்திரப்பரீட்சை (வில் ஆற்றல் அல்லது தனுர் வித்தை)

28.
கனகபரீட்சை (பொன்னை சோதித்து அறியும் அறிவு)

29.
ரத பரீட்சை (தேர் பயிற்சி)

30.
கசபரீட்சை (யானை மீது ஏறி திறமையாக அதனை கையாளுதல்)

31.
சுவபரீட்சை (குதிரை மீது ஏறி திறமையாக அதனை கையாளுதல்)

32.
இரத்தினப் பரீட்சை (நவரத்தினங்கள் சம்மந்தமான அறிவு)

33.
பூமிப் பரீட்சை (மண் பற்றியும் புவியியல் பற்றியுமான அறிவு)

34.
சங்கிராம இலக்கணம் (போர் பயிற்சி)

35.
மல்யுத்தம் (கை கலப்பு)

36.
ஆகர்ஷணம் (அழகாய் தன்னை காண்பித்து பிறரை கவர்தல்)

37.
உச்சாடணம் (மந்திரத்தால் ஒருவரை கட்டுப்படுத்துதல்)

38.
வித்து வேஷணம் (ராஜ தந்திரம் அல்லது பகையாளியை உறவாடிக் கெடுக்கும் கலை)

39.
மதன சாத்திரம் (மாற்றுப் பாலினத்தவர்களை மயக்கும் கலை)

40.
மோகனம் (புணரும் கலை அல்லது காம சாஸ்திரம்)



41.
வசீகரணம் (வசியக் கலை)

42.
ரசவாதம் (பொன்னை தங்கமாக மாற்றுதல்)

43.
காந்தருவவாதம் (இன்னிசை பாடுவது)

44.
பைபீலவாதம் (மற்ற உயிர்களின் மொழியை அறிதல்)

45.
கெளுத்துக வாதம் (சூழ்நிலையை மகிழ்ச்சியாக மாற்றுதல்)

46.
தாது வாதம் (நாடியை கொண்டு நோய் அறிதல்)

47.
காருடம் (பொய்க்கு இடையே உண்மையை எளிதில் கண்டு அறியும் கலை)

48.
நட்டம் (தீயவற்றை முன்பே கிரகித்து சொல்லுதல்)

49.
முட்டி (மறைத்து வைத்து இருப்பதை கண்டு அறிதல்)

50.
ஆகாயப் பிரவேசம் (வான் எல்லையை கடந்து பிற உலகம் செல்லுதல்)

51.
ஆகாய கமணம் (வான் வழியே பிரயாணித்தல்)

52.
பரகாயப் பிரவேசம் (கூடு விட்டு கூடு பாய்தல்)

53.
அதிரிசயம் (தன்னைப் பற்றி நன்கு அறிதல்)

54.
இந்திர ஜாலம் (மாய வித்தைகளை அறிதல்)

55.
மகேந்திர ஜாலம் (உருவத்தை மாற்றுதல் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுதல்)

56.
அக்கினி ஸ்தம்பம் (நெருப்பில் நடக்கும் வித்தை. நெருப்பை நம் இஷ்டப்படி ஆட்டி வைத்தல்)

57.
ஜலத் ஸ்தம்பம் (நீரை நம் விருப்பப்படி கையாளுதல். சமுத்திரத்தையே நம் இஷ்டப்படி ஆட்டி வைத்தல்)

58.
வாயு ஸ்தம்பம் (காற்றை நம் இஷ்டப்படி கட்டுப்படுத்துதல்)

59.
திட்டி ஸ்தம்பம் (கண் கட்டி வித்தை - ஒருவர் கண்களை கட்டி நடக்காத ஒன்றை அவர் முன் நடப்பதாக புலன்களை கொண்டு நம்பவைத்தல்)

60.
வாக்கு ஸ்தம்பம் (ஒருவரை பேச விடாமல் நாவை கட்டுதல்)

61.
சுக்கில ஸ்தம்பம் (விந்தை கட்டுப்படுத்தி குண்டலினி சக்தியை எழுப்புதல்)

62.
கன்ன ஸ்தம்பம் (புதையல் போன்ற செல்வங்களை அவை இருக்கும் இடங்களை உணர்ந்து சொல்லுதல்)

63.
கட்க ஸ்தம்பம் (நம் மீது ஆயுதம் எறிய தயாராகும் ஒருவரை. நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவர் கைகளை கட்டுதல் அல்லது சிலை போல ஆக்குதல் )

64.
அவத்தைப் பிரயோகம் (பில்லி சூனியம் ஏவல் என்று அழைக்கப்படும் அக்கால பீதாம்பர் வித்தை. ஒருவர் திறன்கள் புலன்கள் உணர்வுகளை பதுமையில் அடக்கி பதுமை மூலமாக அவரை கட்டுக்குள் வைப்பது)
மேற்கண்ட இவையே அறுபத்தி நான்கு கலைகள் ஆகும்.

Previous Post Next Post