-->

நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கிறீர்களா? அப்போ இவற்றை கடைபிடியுங்கள்


நிம்மதியான தூக்கம்

நாம் தூங்க செல்லும்போது படுக்கையறையில் என்னதான் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராமல் தவிக்கிறோம். அதற்கு நாம் அன்றாட வாழ்க்கை சுழலில் ஏற்பட்ட ஒரு சில காரணங்களும் ஆகும். இரவில் சரியாக தூங்க முடியாததால் அலுவலகத்தில் வேலைகளை சரிவர செய்ய முடிவதில்லை. மேலும் வேலை நேரத்தில் தூங்கி மேலதிகாரிகளின் கோபத்திற்கும் ஆளகின்றனர். இதை தவிர்க்க தூங்க செல்லும் முன் ஒரு சிலவற்றை அவசியம் கடைபிடித்தால் அடுத்த நாளை வெற்றிகரமாக ஆரம்பிக்க முடியும். உறக்கத்தை கெடுப்பவை எவை, அவற்றை எவ்வாறு கண்டறிந்து சரி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம். 



1. எப்போதுமே வடக்கிலும், தெற்க்கிலும் தலை வைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் காந்த புல வீச்சு இந்த திசைகளை நோக்கியே இருக்கும். அப்படித் தூங்கினால் நமது மூளை பாதிக்கப்பட்டு ஞாபக மறதி ஏற்படும்.
2. தூங்கும் சமயத்தில் டீ, காபி, புகையிலை, சிகரெட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இவற்றை தவிர்ப்பது அல்லது அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மிக்க நலம்.

3. வெறும் தரையில் படுத்து உறங்குதல் கூடாது. இதனால் படுக்கும் தரையைப் பொறுத்து நமது உடல் வெப்பநிலை பாதிக்கப்படும். இதற்க்கு துணி அல்லது பாயை போட்டு படுக்க வேண்டும்.


4. இரவு தூங்குவதற்கு முன்னாள் நன்கு பற்களை துலக்கி விட்டுத் தூங்குவது நல்லது. மேலும் மனதிற்கு பிடித்த நல்ல பாடல்களை கேட்பதும் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.


5. தூங்கும் சமயத்தில் கொசுவர்த்திகளை பயன்படுத்த கூடாது. கொசுவர்த்திகளில் உள்ள வேதியியல் பொருட்கள் காற்றுடன் காற்றாக கலந்து நாம் சுவாசிக்கும் சமயத்தில் நமது உடலில் ஊடுருவி உடலை வெகுவாக பாதிக்கும். இது பக்க வாதம் வருவதற்கு கூட இது வாய்ப்பை ஏற்படுத்தி விடும். இது தூக்கத்தை வெகுவாக குறைத்து விடும். கொசு வராமல் தடுக்க கொசுவர்திக்கு பதில் வேப்ப எண்ணெய் விளக்கை அறையில் ஏற்றி பத்திரமாக ஓரத்தில் வைத்து விட்டுத் தூங்கலாம்.

6. நாம் தூங்கும் இடம் காற்றோட்டமாக இருப்பது அவசியம். அதாவது நல்ல சுத்தமான காற்று உள்ளே வந்து, நாம் சுவாசித்த காற்று வெளியே செல்லும் படியாக இருக்க வேண்டும். இதனால் அதிகப்படியான் பிரானவாயுவை நம் உடல் ஏற்றுக்கொண்டு நிம்மதியான உறக்கம் கிடைக்க வழி வகுக்கும்.


7. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிறு குளியல் போட்டால் உடல் புத்துணர்ச்சி அடைந்து அது நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுக்கும்.

8. தூங்குவதற்கு முன் சிறு மூச்சுபயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொண்டாலும் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

9. தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பே நாம் கைபேசிகளை அணைத்து விட வேண்டும். நமது தூக்கம் கெடுவதற்கு இதுவே முக்கியமான காரணம் ஆகும்.

10. காலை எழுந்தவுடன் நமது அன்றாட முதல் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு. நமது உடலில் உள்ள எல்லா இணைப்புகளுக்கும் பயிற்சி அளிப்பது என்பது அன்றைய தினத்தை சுவாரசியம் ஆக்கும்.

Previous Post Next Post