நவரத்தினங்கள்
பொதுவாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு ரத்தினக் கல் உண்டு.
அந்த ரத்தின கல்லை அணிந்தால் அந்த கிரகத்தின் அருள் கிடைக்கும் என்று
சொல்லபடுகிறது.
பொதுவாக நவரத்தினங்கள் கிரகங்களின் கெடுபார்வையை குறைத்து
நமக்கு நன்மை செய்கின்றன என பரவலாக நம்பப்படுகிறது. ஒரு சிலர் அதிர்ஷ்டத்துக்காக நவரத்தினங்களை
கைகள், மற்றும் கழுத்தில் மோதிரம், மற்றும் செயின்களாக செய்து போட்டு
கொள்கின்றனர். நவ முத்திரைகள் எவ்வாறு உடலைக் காத்து அழகு படுத்துகிறதோ அதே போல நவ
ரத்தினங்களும் உடலை நோய்களில் இருந்து காக்கிறது.
அத்துடன்
பிறரது பார்வை நம் மீது படியும் படியாக வசீகர தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. என்னென
நவரத்தினங்கள் என்ன மாதிரியான நோய்களை குணபடுத்துகின்றன என பார்க்கலாம்.
பொதுவாக நவ ரத்தினங்கள் 9 வகைப்படும், அவை;
பொதுவாக நவ ரத்தினங்கள் 9 வகைப்படும், அவை;
1. மாணிக்கம்
2. முத்து
3. மரகதம்
4. புஷ்பராகம்
5. பவழம்
6. வைரம்
7. வைடூரியம்
8. நீலம்
9. கோமேதகம்
1. மாணிக்க கல்
மாணிக்க கல்லின் அதிபதி சூரிய பகவானவார். மாணிக்க கல் கொண்ட
ஆபரணத்தை அணிவதால் ரஜோ குணம் அதிகரிக்கும். இந்த கல் உணர்ச்சி வசப்படுவதை
கட்டுபடுத்தும். பய உணர்வை போக்கி தைரியத்தை தரும். அத்துடன் நரம்புத் தளர்ச்சி
போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.
மாணிக்க கல்லை அணிபவர்கள் புத்தி கூர்மை மிக்கவர்களாக திகழ்வார்கள். இந்த கல் தீய எண்ணங்கள்,கவலை,கருத்து வேறுபாடுகளை போக்கும் . மாணிக்க கல் நீண்ட ஆயுளை கொடுக்கும்.இந்தக் கல்லை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் தீய கனவுகளில் இருந்து விடுபடலாம்.
2. முத்து
முத்தின் அதிபதி சந்திர பகவானவார்.முத்தை பெரும்பாலும் பெண்களே அதிகம் அணிகிறார்கள். ஆனாலும் ஆண்கள் மோதிரமாக அணிந்து கொள்வது அவர்களின் கோபத்தை தணிக்கும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கும். இது தவிர இதய கோளாறு,எலும்புருக்கி நோய்,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை,தூக்கமின்மை,ஆஸ்த்துமா ஆகிய நோய்களின் தாக்கத்தை முத்து குறைக்கும் என சொல்லபடுகிறது.
3. மரகத கல்
மாணிக்க கல்லை அணிபவர்கள் புத்தி கூர்மை மிக்கவர்களாக திகழ்வார்கள். இந்த கல் தீய எண்ணங்கள்,கவலை,கருத்து வேறுபாடுகளை போக்கும் . மாணிக்க கல் நீண்ட ஆயுளை கொடுக்கும்.இந்தக் கல்லை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் தீய கனவுகளில் இருந்து விடுபடலாம்.
2. முத்து
முத்தின் அதிபதி சந்திர பகவானவார்.முத்தை பெரும்பாலும் பெண்களே அதிகம் அணிகிறார்கள். ஆனாலும் ஆண்கள் மோதிரமாக அணிந்து கொள்வது அவர்களின் கோபத்தை தணிக்கும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கும். இது தவிர இதய கோளாறு,எலும்புருக்கி நோய்,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை,தூக்கமின்மை,ஆஸ்த்துமா ஆகிய நோய்களின் தாக்கத்தை முத்து குறைக்கும் என சொல்லபடுகிறது.
3. மரகத கல்
மரகத கல்லின் அதிபதி புதன் பகவானவார். மரகதக் கல் மனதில் கற்பனை வளத்தை பெருக்கும். ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்கும். அத்துடன் உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி பெறும்.மரகத கல்லை உற்று நோக்கினால் களையிழந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும்.நினைவாற்றலை பெருக்கும் தன்மை கொண்டது மரகத கல். மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். மரகதத்தை வெள்ளியால் மோதிரமாக செய்து போட்டால் இருதய கோளாறு,ரத்த கொதிப்பு,புற்றுநோய்,தலைவலி,நுரையீரல் சம்பந்தமான நோய்களின் வீரியம் குறையும்.
4. புஷ்பராகம்
புஷ்பராக கல்லின் அதிபதி குரு பகவானவார். புஷ்பராக கல்லை மோதிரமாக போல் செய்து அணிந்தால் நம்மில் மறைந்து கிடக்கும் திறமைகள், தனித்தன்மைகள் பிறர் வியக்கும் படியாக வெளியில் கொண்டு வரும். கோபம் குறையும்,மனம்அமைதியாக இருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல்,இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து நம் உடலை காக்கும். நல்ல செரிமான சக்தியை ஊக்குவிக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகியவற்றில் இருந்து காக்கும்.
5. பவளம்
பவள கல்லின் அதிபதி செவ்வாய் பகவானவார். இதை அணிவதால் வேகம் பதற்றம் அதிகரிக்கும். பவளத்தை மோதிரமாக செய்து போட்டால் ஒவ்வாமை நோய்கள்,ரத்த சோகை,மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் அனைத்தும் கட்டுப்படும். ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும்.பவழத்தை சரியான விகிதத்தில் பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவளத்தை புஷ்பராக கல்லுடன்சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்.மலட்டுதன்மையை போக்கும்.
6. வைரம்
வைர கல்லின் அதிபதி சுக்கிர பகவானவார். வைரத்தை மோதிரமாகவோ, காதணியாகவோ அல்லது செயினாகவோ அணிந்தால் நல்ல பலனைத் தரும். தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வைரமானது மலட்டுத் தன்மையை போக்கும் மற்றும் இதயத்துக்கு வலிமையை சேர்க்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய் ,மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து உடலை காத்து ஆண்மைதன்மையை நீடிக்க வைக்கும்.
7. வைடூரியம்
வைடூரிய கல்லின் அதிபதி கேது பகவானவார். வைடூரியத்தை மோதிரமாக செய்து அணிந்தால் நம் மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும் .மனநோய்களை குணப்படுத்தும்.பெருந்தன்மையான மனதையும், பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். மனதெளிவு கொடுக்கும். வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி,ஆரோக்கியம், நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
8. நீலம்
நீல கல்லின் அதிபதி சனி பகவானவார். நீலக் கல்லை மோதிரமாக செய்து அணிந்தால் கீல் வாதம்,இடுப்புவாதம்,நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள்,வலிப்பு ஆகியவற்றிக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். பித்த சம்பந்தமான நோய்களையும். வயிற்று கோளாறுகளை சரிபடுத்தும்.அதிக உடல் பருமனை குறைக்கும்.
9. கோமேதகம்
கோமேதக கல்லின் அதிபதி ராகு பகவானவார். கோமேதகக் கல்லை பயன்படுத்தினால் ஈரல்வலி,குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.