-->

சனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா? கேளுங்க அந்த சுவாரஸ்யத்தை



சனிபகவான் பிறந்த வரலாறு


நமது ஜோதிட சாஸ்திரங்களில் மிகவும் அச்சுறுத்தும் கிரகம் என்றால் அது சனிக்கிரகம் தான். இந்த கிரகத்தின் அதிபதிசனி பகவான். சனியின் ஆதிக்கம் இருந்தால் அரசனும் ஆண்டியாவன், ஆண்டியும் அரசன் ஆவான். இவர் யமனின் சகோதர் என்றும் நீதியின் அரசர் என்றும் கூறப்படுகிறது.அப்படி எல்லாரோயும் ஆட்டிப் படைக்கிற சனிபகவான் பற்றிய சுவாரஸ்யமான வரலாறை இந்த பகுதியில் பார்க்கலாம்.

சூரிய பகவானின் மனைவியான சாந்தா ஒரு சிறந்த சிவபக்தை ஆவார். இவர்களுக்கு வைவாஸ்வதா மனு, யமன் மற்றும் யமி என்ற மூன்று குழந்தைகள் இருந்தன. சாந்தா தன் பக்தியின் வலிமையை அதிகரிக்க சிவனை நோக்கி தீவிர தவம் புரிய முடிவு செய்தார்.

ஆனால் சூரிய பகவானை விட்டுச் செல்லுவதற்கு மனம் இல்லாமல் தன்னுடைய நிழலை கொண்டு சாயா தேவி என்ற பெண்ணை உருவாக்கி விட்டுச் சென்றாள்.சாயா என்பதற்கு நிழல் என்று பொருள். தனது கணவன் மற்றும் மூன்று குழந்தைகளையும்காக்க வேண்டும் என்று கூறி விட்டு தவம் புரிய சென்று விட்டாள்.

சூரிய பகவான் சாயா தேவியை சாந்தாவாக நினைத்து அவருடன் வாழ்ந்தார். இதனால் அவர்களுக்கு மனு, சனி மற்றும் தபதி என்ற மூன்று குழந்தைகள் பிறந்தன.சூரிய பகவானின் வெப்பம் காரணமாக சனி பகவான் கருவில் இருக்கும் போதே கருப்பாக மாறி கருமையான நிறத்தில் பிறந்தார்.

தாயின் சாயல் (ஜாடையைப் போல) சனி பகவானுக்கு வந்ததால் அவர் கருமையாக தோன்றினார். இதனால் சூரிய பகவான் சனி தன்னுடைய குழந்தையாக இருக்க முடியாது என்று சாயா தேவி மீது சந்தேகம் கொண்டார். அது மட்டுமல்லாமல் சனி பகவான் முதல் முறையாக சூரிய பகவானை சூரிய கிரகணம் அன்று பார்த்ததால் அவரின் கெட்ட பார்வை மட்டுமே அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சூரிய பகவானால் சபிக்கப்பட்டார்.

முடமான கால்
சாயா தேவி தனது குழந்தைகளை அன்புடன் கவனித்து கொண்டார். அவர் தீவிர சிவ பக்தர் என்பதால் ஒரு நாள் சிவனுக்கு பிரசாதம் தயாரித்து எடுத்துச் சென்றார். அப்பொழுது குழந்தையாக இருந்த சனி பகவான் பசியின் காரணமாக அதை சாப்பிட முயன்றார்.

அவரின் தாய் சிவன் பூஜைக்கு பிறகே சாப்பிட வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியதால் கோபமடைந்த சனி அவரின் தாயை காலால் உதைத்தார். இதனால் சனி பகவானின் ஒரு கால் முடமானது.

சிவனின் அருள்
சாயா தேவி சனி பகவானை கருவில் சுமக்கும் போதே சிவனை வழிபட்டு வந்தார். இதனால் சனி பகவானுக்கும் இயற்கையாகவே சிவனின் மீது தீவிர பக்தி இருந்தாது. சிவபெருமானே சூரிய பகவானிடம் சனியின் பிறப்பு பற்றிய சந்தேகத்தை தீர்த்து தந்தை மற்றும் மகனுக்கு இடையே நல்ல உறவை ஏற்படுத்தி கொடுத்தார்.

சனியின் தீவிர பக்தியில் மயங்கிய சிவ பெருமான் அவரை மக்கள் செய்கின்ற நன்மைக்கும் தீமைக்கும் தகுந்த மாதிரி நன்மைகளையும் தண்டனையும் கொடுக்கும் கடவுளாக இருக்க வரம் கொடுத்தார். சிவனுக்கு பிறகு ஈஸ்வர பட்டம் பெற்ற கடவுள் சனி பகவனாவார்.

சனி பூஜை
சனி பூஜை நன்மைகளை அள்ளித் தரும் மாபெரும் பூஜையாகும்.இந்த சனி பூஜை சனிக்கிழமையில் செய்யப்படுகிறது. இந்த பூஜை விடியற்காலை முதல் பகல் வரை நீடிக்கிறது. விடியற்காலையிலயே பக்தர்கள் எழுந்து உடம்பு முழுவதும் எள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

அந்த நாள் முழுவதும் கருப்பு ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். மேலும் அந்த நாள் முழுவதும் எள் எண்ணெய் ஊற்றி வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

பூஜை செய்யும் முறை
விளக்கை ஏற்றி முதலில் முதற்கடவுளான பிள்ளையாரைவணங்கி வழிபட வேண்டும். பிறகு கருப்பு எள்ளை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். மலர்களை தூவி சிவன் மற்றும் ஹனுமானை வழிபட வேண்டும். பூஜையின் முடிவில் சனி காயத்ரி மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்து வழிபட வேண்டும். பிரசாதம் படைத்து ஆர்த்தி காட்ட வேண்டும்.

நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இதே பூஜையை திரும்பவும் செய்ய வேண்டும். விரதத்தை மாலையில் முடிக்கும் போது அரிசி சாதத்துடன் உளுந்து அல்லது எள் கலந்த சாதம் சமைத்து சாப்பிட வேண்டும். விரதத்தின் போது அசைவ உணவை சாப்பிடக் கூடாது. இந்த பூஜை முறைகளை பின்பற்றி வழிபட்டால் சனி பகவானின் அருளை பெற்று எந்த கெடுதலும் இல்லாமல் நிம்மதியான வாழ்வு வாழலாம்.

சனி காயத்ரி மந்திரம்


சனி காயத்ரி மந்த்ரா
ஓம் சனீஸ்வராய வித்மஹே
சூர்யபுத்திராய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

பொருள்:சூரிய பகவானின் புதல்வரான சனி பகவானே! என் அறிவை வெளிச்சமாக்கி வழிகாட்டும்.

சனி பகவான் ஒரு உக்கிரமான கடவுளே கிடையாது. அவர் நாம் செய்யும் நன்மை தீமைக்கு ஏற்ப நமக்கு நன்மைகளையும், தண்டனைகளையும் வழங்குவார். எனவே நமது நல்ல கெட்ட விஷயங்களை பொருத்தே அவர் பார்வை இருக்கும். இருப்பினும் சில நற்செயல்கள் செய்வதன் மூலம் அவரின் அணுகூலத்தையும் நாம் பெற இயலும்.

Previous Post Next Post