-->

விநாயகர் சதுர்த்தி விரதத்தின் சிறப்புகள்


விநாயகர் சதுர்த்தி வழிபாடு

தமிழர்கள் கொண்டாடும் பல பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை விநாயகர் சதுர்த்தி. முழுமுதற் கடவுளான விநாயகரை மகிழ்விக்கும் விதமாக இந்த பண்டிகை அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. நாளை திங்கட்கிழமை 02.09.2019 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாப்படுகிறது.


விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவோர்க்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கபெறும் என்பது நம்பிக்கை. முதன் முறையாக தொழில் தொடங்குவோர், சுப காரியங்கள் அனைத்தும் இந்நாளில் செய்வது சிறந்ததாகும்.

அன்னை பார்வதி தேவி இந்த சிறப்பு வாய்ந்த சதுர்த்தி விரதத்தை இருந்து தான் தன் கணவர் சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்தது விநாயகர் சதுர்த்தி.

திருமணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள், குடும்பத்தில் தீராத பிரச்சனையுடன் இருப்பவர்கள் இந்த சதுர்த்தி விரதத்தை இருந்து விநாயகரை உள்ளன்போடு வழிபட்டால் அனைத்து சங்கடங்களையும் தீர்ந்து வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

விநாயகர் சதுர்த்தி விரதம்

  1. விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் மாவிலை, தோரணங்களை கட்ட வேண்டும். அப்போது தான் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி சென்று தெய்வ சக்தி உண்டாகும்.
  2. விநாயகர் சதுர்த்தி அன்று விடியற்காலையில் எழுந்து வீட்டினை சுத்தம் செய்து அரிசி மாவினால் கோலமிட வேண்டும்.
  3. பின்னர் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும்.
  4. பூஜை அறையில் உள்ள படங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களினால் அலங்காரம் செய்ய வேண்டும்.
  5. பின் பூஜை அறையில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஒரு மனையை வைக்க வேண்டும். மனை இல்லை என்றால் சுத்தமான ஒரு மரப்பலகையை வைக்கலாம்.
  6. அந்த மனை முழுவதும் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அரிசி மாவினால் kolam போட வேண்டும்.
  7. பின்னர் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைக்க மனையின் மீது வைக்க வேண்டும்.
  8. விநாயகருக்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். பூ வைக்க வேண்டும்.
  9. பின் விநாயகருக்கு பிடித்த அருகம்புல், ஏருக்கம் பூ மாலையை அணிவிக்க வேண்டும்.
  10. அதன் பிறகு அவருக்கு பிடித்தமான அவல், பொறி, கொழுக்கட்டை, மோதகம். பழங்கள் போன்றவற்றை செய்து வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
  11. தீபாராதனை காட்ட வேண்டும். பின் விநாயகர் துதி, விநாயகர் போற்றி போன்ற பாடல்களை பாடி அவரை மகிழ்விக்க வேண்டும்.
  12. அந்த விநாயகரை இந்த சதுர்த்தி தினத்தில் இருந்து புரட்டாசி மாத சதுர்த்தி வரை வீட்டில் வைத்து வழிபட வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் சதுர்த்தி தினத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு வீட்டில் வைத்து வழிபட்டு பின்னர் மூன்றாவது நாள் நீர் நிலைகளில், ஆறு,குளம்,கடலில் விட்டு விடலாம்.
  13. விநாயகர் வீட்டில் வைத்திருக்கும் மூன்று நாட்களும் வீட்டினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். தினமும் அவருக்கு பிடித்த ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.



இவ்வாறு செய்து விநாயகரை வழிபட்டால் நம் வாழ்வில் வறுமை நீங்கி சகல செல்வங்களும் நிறைந்து வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.





Previous Post Next Post