-->

செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா




தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் - 2
பெரிய வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ½  கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
முழு மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு - 2
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
  • முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • தேங்காயை துருவி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், முழுமல்லி (தனியா), சீரகம், கசகசா, மிளகு, சோம்பு,பட்டை,கிராம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
  • அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • மசாலா பச்சை வாசனை போனதும்  வேக வைத்த மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். 
  • முருங்கை காய் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். 
  • மட்டனுடன் மசாலா கலவை நன்கு சேர்ந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறினால் சுவையான முருங்கைக்காய் மட்டன் மசாலா ரெடி.

Previous Post Next Post