-->

காசினி கீரையின் மருத்துவ பயன்கள்


காசினி கீரையின் நன்மைகள்

காணாம்கோழிக் கீரை என்ற பெயர்தான் மருவி காசினி கீரை ஆனது. இது புளிச்ச கீரை வகையை சேர்ந்த கீரையாகும். காசினிக்கீரையின் தாவரவியல் பெயர் 'சிக்கோரியம் இன்டிபஸ்' [Chicorium intybus] என்பதாகும். காபி பொடியில் கலப்பார்களே ‘சிக்கரி’, அது இந்த செடியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.


காசினி கீரையில் இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சத்துகளான ஏ, பி, சி, போன்றவை நிறைந்து உள்ளது. காசினி கீரை அதிக உயிர்ச்சத்து கொண்டதாகும். காசினி கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.

காசினி கீரையானது கொம்புக் காசினி, சீமைக் காசினி, வேர்காசினி, சாலடு காசினி என பல வகைப்படும்.

காசினி கீரை மருத்துவ பயன்கள்




1. காசினி கீரையானது ஜீரண கோளாறு, பித்தப்பை, ரத்த சோகை, கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், இருதய நோய்களை குணபடுத்தும் தன்மை கொண்டது.
2. உடலில் எந்த இடத்தில் வீக்கம் எற்பட்டிருந்தலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை.
3. காசினி; கீரை சிறுநீரகத்தை சுத்திகரித்து நன்கு செயல்பட வைக்கும்.
4. காசினி கீரையை உண்டு வந்தால் பற்கள் சம்பந்தமான எந்த பிரச்சனையும் உங்களை அண்டாது.
5. உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலை குண்டாவதில் இருந்து பாதுகாக்கிறது.
6.  பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், அதிக உதிரப்போக்கு இவற்றில் இருந்து நிவாரணம் பெற காசினிக் கீரையை உலர்த்தி பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டுவர வெள்ளைபடுதல் நோய் குணமாகும். காசினிக்கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.
7. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் அவ்வளவு எளிதில் ஆறாது. இதற்கு காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் பற்று போல போட்டு கட்டினால் விரைவில் புண்கள் ஆறிவிடும். இந்த கீரையின் வேர் காய்ச்சலைப் குணமாக்கி உடலுக்கு அதிக வலுவை கொடுக்கும்.
8. காசினி கீரை விந்தணு உற்பத்தியை ஊக்குவிக்கும்.

Previous Post Next Post