-->

கரிசலாங்கன்னி கீரையின் மருத்துவ பயன்கள்


கரிசலாங்கன்னி கீரை நன்மைகள்

கரிசலாங்கன்னி கீரைகளின் அரசி என அழைக்கபடுகிறது. இது மஞ்சள் மற்றும் வெள்ளை நிற பூக்களை வைத்து மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என அழைக்கபடுகிறது. இந்த கீரை வயல்வெளிகளிலும், வாய்கால் ஓரங்களிலும், மற்றும் ஈரபதம் நிறைந்த இடங்களிலும் வளரும் இயல்புடையது. இந்த கீரையின் இலைகள் நீண்டும், சுரசுரப்புடனும் காணப்படும்.



இந்த கீரையில் நீர்சத்து, மாவுசத்து, புரதசத்து, கால்சிய சத்து, கொழுப்புசத்து, இரும்புசத்து, மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இந்த கீரை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள்


1. கரிசலாங்கண்ணிச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து சிறிது சூடேற்றி அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் நரை ஏற்படாது.
2. கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடல் பிரகாசம் அடையும். மேலும் மூளைக்கும், கண்களுக்கும் குளிர்ச்சியை கொடுக்கும்.
3. கரிசலாங்கண்ணி மிக சிறந்த கிருமி நாசினி ஆகும். இதை புண்கள் மற்றும் அடிபட்ட இடத்தில் இந்த கீரையின் இலையை அரைத்து அதன் மேல் தடவி வந்தால் விரைவில் குணம் அடையும்.
4. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி பிரச்சனைக்கு இந்த கீரை மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
5. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த கீரையின் சாற்றை எடுத்து காலை, மாலை என இரண்டு அவுன்ஸ் வீதம் ஏழு நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க மஞ்சள் காமாலையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
6. கல்லீரல் வீக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கரைத்து கொடுத்தால் ஈரல் வீக்கம் குறையும்.
7. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும். அந்த காலங்களில் கரிசலாங்கண்ணியின் இலையை வேக வைத்து அதை வடிக்கட்டி காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும்.
8. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.
9. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.
10. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு, பருப்புக் கீரைச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்ப கட்டத்தில் உள்ள புற்றுநோய் குணமாகும்.

Previous Post Next Post