குப்பை கீரை நன்மைகள்
குப்பை கீரையானது சாதரணமாக எல்லா
இடங்களிலும் வளரக்கூடியது. இது குப்பையில் முளைத்தாலும் அதில் ஏராளமான சத்துக்கள்
அடங்கியுள்ளது. உடலுக்கு அதிக நன்மை செய்யும் கீரைகளில் முக்கியமானது இந்த
குப்பைக்கீரை. குப்பைகீரைக்கு முள்ளிக்கீரை என்ற பெயரும் உண்டு. குப்பைகீரையானது தண்டுக்கீரை
வகையைச் சார்ந்த கீரை வகையாகும்.
குப்பை கீரையில் முற்றிய இலைகளைவிட
இளந்தளிர்களே சமைக்க சிறந்தது. இந்த கீரையில் நார்சத்து மிகுதியாக உள்ளது.
வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில்
உள்ளது.
குப்பை கீரையின் மருத்துவ பயன்கள்
1. குப்பைக் கீரையுடன், துவரம் பருப்பு
சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால்,
குடல் புண்கள் குணமாகும்.
2. குப்பைக் கீரையுடன் மிளகு, சீரகம்
இரண்டையும் சேர்த்து, கஷாயமாக்கிக் குடித்தால், நன்றாகப் பசி எடுக்கும்.
3. குப்பைக் கீரையுடன் சீரகம்
(சிறிதளவு) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.
4. குப்பைக் கீரையுடன் பூண்டு, சீரகம், மஞ்சள்
ஆகியவற்றைச் சேர்த்து, கஷாயமாக்கிக் குடித்தால் வாயுக் கோளாறுகள் குணமாகும்.
5. குப்பைக்கீரை, முடக்கறுத்தான்
கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
6. குப்பைக்கீரையுடன் மஞ்சள் தூள், அரை டீ ஸ்பூன்
ஓமம் சேர்த்து நன்றாக காய்த்து அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
7. குப்பை கீரையை உடலில் ஏற்படும்
கட்டிகள், தழும்பு, மரு, முகப்பரு ஆகியவற்றின் மீது அரைத்து பூசிவந்தால் கட்டிகள் கரைந்து குணமாகும்.
8. அடிபட்ட இடங்களில் வீக்கம் ஏற்பட்டால் குப்பைக்கீரையை அரைத்து மஞ்சள்
சேர்த்து பூசி வந்தால் வீக்கம் குறையும்.
9. நரம்புத் தளர்ச்சி உடையவர்கள்
குப்பை கீரையை சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
10. விஷ ஜந்துக்களான பாம்பு மற்றும்
தேள் கடிக்கு விஷ முறிவு மருந்தாக குப்பை கீரை விளங்குகிறது.
11. குப்பை கீரையானது பசியைத்தூண்டும்,
குடலை சுத்தமாக்கும், மலசிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
12. குப்பை கீரையானது உடலில் தங்கியுள்ள
தேவையில்லாத கெட்டக் கொழுப்பைக் கரைக்கும்.