-->

பண்ணைக்கீரையின் மருத்துவ பயன்கள்


பண்ணைக்கீரையின் நன்மைகள்

பண்ணைக்கீரை அனைத்து இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டது. இதற்கு மசிலிக்கீரை என்ற பெயரும் உண்டு. பண்ணை கீரையின் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. 

பண்ணைகீரை மருத்துவம்

இதன் பூக்கள் கோழியின் கொண்டையை போன்ற உருவத்தை உடையது.
வைட்டமின் குறைபாடுகளால் வர கூடிய வயிற்று கோளாறுகள், பலவீனமான எலும்புகள், மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலிகள் என அனைத்து வலிகளையும் போக்கும் வல்லமை கொண்டது பண்ணைக்கீரை.

பண்ணைக்கீரையின் மருத்துவ பயன்கள்

1. பண்ணைக்கீரையில் அதிக கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குழந்தைகளுக்கு வார ஒருமுறை கொடுத்தால் நல்லது.
2. பண்ணைக்கீரையில் வைட்டமின் யு, இ, டீ சத்துக்கள் அதிகமுள்ளது.
3. பண்ணைக்கீரையானது குடல்புண் மற்றும் சரும வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
4. ரத்த கசிவுகளால் புண்கள் ஏற்பட்டு அதனால் உண்டாகும் நுண்கிருமிகளை உடலில் செல்ல விடாமல் தடுத்து உடலை பராமரிக்கிறது.
5. பண்ணை கீரையானது பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபோக்கு, மாதவிலக்கு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளை தீர்க்கும்.
6. பண்ணை கீரைக்கு  ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டு. 
7. பண்ணை கீரையானது மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகளவிலான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
8. பண்ணை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரையும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
9. இக்கீரையானது வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது.
10. இக்கீரையை தொடர்ந்து எடுத்துகொண்டால் கால்சியம், இரும்பு சத்து குறைபாடு நீங்கும். 
11. பண்ணைக்கீரை குடலுக்கு வலுவை தரும். சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலத்தை இளக்கி மலச்சிக்கலை தீர்க்கும்.
12. பண்ணைக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.  மேலும் தோல்சம்பந்தமான நோய்கள்  மற்றும் உடல் சூடு ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை கொண்டது பண்ணை கீரை.
13. பண்ணைகீரையானது ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.


Previous Post Next Post