-->

பசலைகீரையின் மருத்துவ பயன்கள்


பசலைகீரையின் நன்மைகள்

உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை அதிகம் தரும் கீரை வேறு எதுவும் இல்லை. உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அப்படி மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ற சிறப்பான கீரை என்றால் அது பசலைக்கீரை தான்.


பசலைகீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் ஆகியவை அதிகமாக காணப்படுகிறது. சராசரியாக 100 கிராம் பசலைக் கீரையில் 79 கிராம் கலோரி, கார்போஹைட்ரேட் - 3.4 கிராம், கொழுப்பு - 0.3 கிராம், புரதம் - 1.8 கிராம், தயாமின் - 0.05 மி.கி, ரிபோஃப்ளேவின் - 0.155 மி.கி, நியாசின் - 0.5 மி.கி, வைட்டமின் பி 6 - 0.24 மி.கி, கால்சியம் - 109 மி.கி இரும்பு - 1.2 மி.கி, மக்னீசியம் - 65 மி.கி, மாங்கனீசு - 0.735 மிகி, பாஸ்பரஸ் - 52 மி.கி, பொட்டாசியம் - 510 மி.கி, துத்தநாகம் - 0.43 மி.கி ஆகியவற்றுடன் வைட்டமின் ஏ, , ஃபோலிக் அமிலம் போன்றவையும் நிறைந்து காணப்படுகிறது.

பசலை கீரையின் இலைகள் சிறிது சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும். பசலை கீரையில் கொடிபசலை மற்றும் சிறுபசலை என இருவகை உண்டு. கொடி பசலை கொம்புகள், மரங்கள், செடிகள் இவற்றை பற்றியபடி வளரும் தன்மை கொண்டது, சிறுபசலை தரையோடு தரையாக வளரும் தன்மை கொண்டது. 

ஆனால் மருத்துவ குணங்கள் என்று பார்த்தால் இரண்டுக்கும் ஒன்றுதான். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக் கீரை வளரும். இதன் இலை எள்ளின் உருவத்தில் வெந்தயம் அளவு பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும்.

பசலைகீரையின் மருத்துவ பயன்கள்

1. பசலைக்கீரை இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுக்கிறது.
2. பசலை கீரையிலுள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைபாடு ஏற்படமல் தடுக்கிறது.
3. பசலைகீரையில் அதிகமாக பச்சையம் உள்ளது. இந்த பச்சையமானது உடலில்  கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது.
4. பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
5. பசலை கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் உடல் பருமனாவதில் இருந்து தப்பிக்கலாம்.
6. பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
7. பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு பைட்டோ நியுட்ரியண்ட்டுகள் இருக்கிறது. இது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
8. இந்த கீரையில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ள உதவும்.
9. இக்கீரை குளிர்ச்சி தன்மை கொண்டாதாகும். அதனால் குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள் இந்த கீரை அதிகம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.


Previous Post Next Post