பிரண்டை நன்மைகள்
பிரண்டையானது வெப்பமான இடங்களில் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். பிரண்டை
கொடி வகையைச் சார்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும்
அதிகமாகக் வளர்கிறது. சதைபிடிப்பான நாற்கோண வடிவத் தண்டுகளையுடையது. பிரண்டை சாறு
உடலில் பட்டால் எரிச்சல் மற்றும் நமச்சல் ஏற்படும்.
சிவப்பு நிற உருண்டையான
கனியுடையது விதை. கொடி மூலம் விருத்தி அடைகிறது,
இதில் ஆண்
பிரண்டை, பெண் பிரண்டை என இரு வகை உண்டு. பெண் பிரண்டையின்
கணு 1 முதல் 1 12 அங்குலமும் ஆண் பிரண்டையின் கணு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும்.
இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும்.
பிரண்டையில் சாதாரண பிரண்டை,
சிவப்பு
பிரண்டை, உருட்டுப் பிரண்டை,
முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை
எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும்.
பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. ஏனேனில் பிரண்டையானது உடைந்த
எலும்புகளை ஓட்ட வைக்கும் தன்மை கொண்டது.
பிரண்டை மருத்துவ பயன்கள்
1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.
2. பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப்
சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை
கட்டுப்படுத்தும்,
உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும்.
உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும்.
3. பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள்
உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை
உதவுகிறது.
4. பிரண்டையில் சாறு 6
தேக்கரண்டி மற்றும்
ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு
மாதவிடாய் சீராகும்.
5. பிரண்டையை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல்
வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.
6. பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு
அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை,
மாலை சாப்பிட
ரத்த மூலம் குணமாகும்.
7. பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு
எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.
8. இரைப்பை அழற்சி,
அஜீரணம், பசியின்மை போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு பிரண்டை துவையல்
மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
9. உள் மற்றும் வெளி மூலம் மற்றும் வயற்றில் உள்ள குடற்புழுக்களை
நீக்குவதற்கும் பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.