சக்கரவர்த்தி கீரை நன்மைகள்
கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது
சக்கரவர்த்தி கீரை என பெயர் வந்தது. இந்த கீரையின் இலை அமைப்பு வாத்தின் கால் போல
இருக்கும். சக்கரவர்த்தி கீரையை,
பருப்பு கீரை, கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்ற
வேறு பெயர்களும் உண்டு. இது வயல் வரப்புகளில் தானாக வளரக்கூடியது.
தமிழகத்தில் சில
பகுதிகளில் இதைப் பயிரிடவும் செய்கின்றனர். சக்கரவர்த்திக் கீரை செங்குத்தாக
சுமார் மூன்றடி உயரம் வரை வளரும். இது பசுமை கலந்த செந்நிறத் தண்டுகளையும், கருஞ்சிவப்பு
நிறத் தழைகளையும் உடையது.
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த
கீரையில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கால்சியம் சத்து நிறைந்த இது, எலும்புகளுக்கு
பலத்தை கொடுக்க கூடியது. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது.
சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
1.
சக்கரவர்த்தி கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்க வல்லது.
2. சக்கரவர்த்திக் கீரையை வாரத்திற்கு
நான்கு நாட்கள் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாம்பத்தியத்தில் விருப்பம்
அதிகரித்து இல்லற வாழ்வு இன்பமயமாகும்.
3. சக்கரவர்த்தி கீரையின் இலையை
அரைத்து உடலில் மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்வதால் வெயிலால் ஏற்படும் தோல்
சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.
4. சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி மூட்டுவலியை போக்கும் மேல்பூச்சு
மருந்து தயாரிக்கலாம்.
5. சக்கரவர்த்தி கீரையை தொடர்ந்து
உணவோடு எடுத்து கொண்டால் சிறுநீரக கற்களை
கரைக்கும், நோய் தொற்றுக்களை போக்கும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும், வயிற்று புண்ணை
குணமாக்கும் மற்றும் ரத்த சோகையை சரிசெய்யும்.
6. சக்கரவர்த்தி கீரை வயிற்றுப் புண்களை
சரி செய்யும் தன்மை கொண்டது.
7. சக்கரவர்த்தி கீரையானது புற்றுநோயை
தடுக்கவல்லது, மேலும் இந்த கீரை,
எலும்புகளை பலமடைய செய்கிறது. சிறுநீரை
வெளியேற்றும் தன்மை கொண்டது.
8. சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு
கோளாறுக்கான மருந்துகள் தயாரிக்கலாம்.