-->

பிண்ணாக்கு கீரையின் மருத்துவ பயன்கள்


பிண்ணாக்கு கீரை நன்மைகள் 

பிண்ணாக்கு கீரையானது ஒரு மிக சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு கீரையாகும். இது சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இந்த கீரையானது குப்பையோடு குப்பையாக, அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது ஆகும். இதன் தண்டுகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். தரையோடு தரையாக வளரும் இயல்புடையது இந்த பிண்ணாக்கு கீரை. 


இந்த பிண்ணாக்கு கீரை உடலில் ஏற்படும் வாய்வு தொடர்பான தொல்லைகளை குணப்படுத்தக் கூடிய தன்மை உடையதாகும்.
பிண்ணாக்கு என்பதை மாட்டுக்கு பால் சுரப்பதற்கு உதவும் வகையில் தொடர்புடைய ஒரு சொல்லாக கூறப்படுகிறது. அதே போல் இந்த செடியும் மாடுகளுக்கு பால் சுரப்பதற்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய வாத, பித்த கோளாறுகளை நீக்க கூடியதாகும்.

பிண்ணாக்கு கீரை மருத்துவ பயன்கள்

1. பிண்ணாக்குக் கீரையை அரைத்து, அதில் சிறிதளவு மஞ்சள், கால் ஆணி ஏற்பட்ட இடங்களில் போட்டு வந்தால் கால் ஆணி மறையும்.
2. பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது  பார்லி சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டு வந்தால் கால் வீக்கம் குணமாகும்.
3. பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கட்டு, நீர்கடுப்பு குணமாகும்.
4. பிண்ணாக்குக் கீரை சாறு எடுத்து, அதில் கடுக்காய்த் தோலை ஊறப்போட்டு, உலர்த்தி பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.
5. பிண்ணாக்குக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் போல செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
6. பிண்ணாக்குக் கீரைச் சாற்றில் அதிமதுரத்தை ஊறவைத்து பிறகு காயவைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம் உண்டாகும். தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

7. பிண்ணாக்குக் கீரைச் சாற்றில் அமுக்கரா கிழங்கை ஊறவைத்து, பின்பு காய வைத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும் . உணர்வு நரம்புகளும் பலம்பெறும்.
8. வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் திறன் கொண்டதாக பிண்ணாக்கு கீரை விளங்குகிறது.
9. வயிற்றில் உருவாகும் புற்றுநோயை தடுக்கும் திறன் உடையது பிண்ணாக்கு கீரை.
10. பிண்ணாக்கு கீரையானது சிறுநீர் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து பின்பு சோற்றுடன் நோய் கலந்து சாப்பிட்டு வர உடல்சூடு, சீதபேதி, ரத்தபேதி போன்றவை குணமாகும்.

Previous Post Next Post