சுக்கான் கீரை நன்மைகள்
சுக்கான் கீரையானது பல்வேறு மருத்துவ பயன்கள் கொண்ட ஒரு கீரை
வகையாகும். இது தானாகவே வளரும் இயல்புடையது. இது சுக்கு கீரை, சொக்கான் கீரை
எனவும் அழைக்கபடுகிறது.
100 கிராம் சுக்கான் கீரையில்
சுண்ணாம்புச் சத்து – 60 மி.கி, இரும்புச் சத்து – 9 மி.கி, மணிச்சத்து – 15 மி.கி, வைட்டமின்
ஏ – 10 மி.கி, வைட்டமின் சி – 13 மி.கி, தயாமின் – 0.03 மி.கி, ரைபோஃபிளேவின் – 0.066 மி.கி அடங்கியுள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும்
கால்சியம், இரும்புச் சத்து இதில் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு
அடிக்கடி கொடுக்கலாம்.
சுக்கான் கீரை மருத்துவ பயன்கள்
1. சுக்கான் கீரையை புளி சேர்க்காமல்
பாசிப் பருப்புடன் சேர்த்து வேக வைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண்
குணமாகும்.
2. அதிக இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த
இரத்த அழுத்தம் கொண்டவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த
அழுத்தம் சீராகும்.
3. சுக்கான் கீரையின் வேரை நிழலில்
உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன்
பல் ஈறுகள் உறுதியாகும்.
4. சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால்
மலச்சிக்கல் ஏற்படாது.
5. சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம்
சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி
அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
6. சுக்கான் கீரையை சூப் போல செய்து
அருந்தி வந்தால் ஈரல் நன்கு பலப்படும்.
7. சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு
சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.
8. தேள் கொட்டிய இடத்தில சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி
குறையும், மூர்ச்சை ஏற்படாது. விஷமும் விரைவில் இறங்கும்.
9. சுக்கான் கீரையை சுத்தம் செய்து, மிளகுத்தூள்
சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், பித்தம் குறையும். கல்லீரல் பலப்படும்.
மஞ்சள் காமாலையின் வீரியத்தை குறைக்கும்.
10. சுக்கான் கீரையில் கால்சியம் சத்து
அதிகம் இருப்பதால், வயதாவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத்
தடுக்கலாம்.