துத்தி கீரை நன்மைகள்
துத்திக் கீரையானது பருத்தி இனத்தைச்
சார்ந்த ஒரு குறுஞ்செடி ஆகும். இதற்கு 'அதிபலா' என்ற பெயரும் உண்டு. இதன் இலைகள்
மிகவும் பசுமையாக இதய வடிவில் இருக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் பூக்கள்
பூக்கும். இதனுடைய விதை, வேர், இலை, பூ, காய் என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. இதன் காய்கள் தோடு
போன்று காணப்படும். இது இனிப்புச் சுவை உடையது.
உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத்
தரக்கூடியது. இது கடற்கரை ஓரங்கள், சாலை ஓரங்கள், புதர்கள் ஆகியவற்றில் வளரக்கூடியது.
இது இரண்டு முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். துத்திக் கீரையில் மொத்தம் 29 வகைகள்
உள்ளன.
அதில் பசும்துத்தி, கருந்துத்தி, சிறுத்துத்தி, பெருந்துத்தி, எலிச்செவிதுத்தி, நிலத்துத்தி, ஐயிதழ்துத்தி, ஒட்டுத்துத்தி, கண்டுத்துத்தி, காட்டுத்துத்தி, கொடித்துத்தி, நாடத்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத்துத்தி
போன்றவை குறிப்பிடதகுந்தவை ஆகும். ஆனால், அதிகமாகப் பயன்படுத்தப்படுவது `பணியாரத் துத்தி’ என்கிற வகையாயே
ஆகும். துத்திக் கீரை வெப்ப மண்டல பிரேதசங்களில் நன்கு வளரும் கீரையாகும்.
துத்திக் கீரை மருத்துவ பயன்கள்
1. பல் மற்றும் ஈறு நோய் குணமாக துத்தி
கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால்
பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
2. குடல் புண் மற்றும் சிறுநீர்
பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தி கீரையை ரசம் செய்து குடித்து
வந்தால் நீர் நன்கு பிரியும்.
3. மூலநோய் உள்ளவர்கள் துத்திக் கீரையை
அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மூல நோயில் இருந்து விரைவில் நிவாரணம்
கிடைக்கும்.
4. துத்தி கீரையை இடித்துச் சாறு தயாரித்து அதனுடன் நெய் சேர்த்து
சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.
5. துத்திப் கீரை ஒரு கைப்பிடியளவு எடுத்து, பசும்பாலில்
போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு
குறையும். தாது விருத்தி ஏற்படும். விந்து கூடுதலாக உற்பத்தியாகும்.
6. துத்தி விதையைப் பாலில் ஊறவைத்து
கற்கண்டு சேர்த்துச் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சூட்டினால் ஏற்பட்ட இருமல்
தீரும்.
7. வெப்ப கட்டி மற்றும் மூலத்தால்
உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலைச் சாறை அரிசி மாவில் களி போல கிளரி கட்டிகளின்
மேல் வைத்துக் கட்டி வந்தால் வெப்பக்கட்டிகள் விரைவில் குணமாகும்.