-->

சௌசௌவின் மருத்துவப் பயன்கள்


சௌசௌ நன்மைகள் 

நாம் ஒரு சில காய்கறிகளை எப்பொழுதாவது தான் உணவில் சேர்த்து கொள்வோம். அப்படிபட்ட காய்கறிகளில் ஒன்று தான் சௌசௌ’. இதை பெங்களூரு கத்திரிக்காய் என்றும் அழைப்பார்கள். இந்த செடியின் இலைகள், காய்கள் மற்றும் விதைகள் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்து காணப்படுகின்றன.

கொடி வகையைச் சார்ந்த சௌசௌ குளிர்ப்பிரேதேச பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதன் இலைகள் பெரியதாக பிளவுபட்டுக் காணப்படும். இளம் காய்கள் வெளீர் பச்சை நிறத்தில் காணப்படும். இதன் விதைகள் காய்களின் உட்புறம் இருக்கும். முற்றிய விகைகளை பயிரிட பயன்படுத்தலாம்.

சௌசௌவை பொரியல் செய்தோ, குழம்பில் சேர்த்தோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சூப் செய்தோ சாப்பிட்டு வர பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். சவ்சவ்வில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன.

100 கிராம் சௌசௌவில நிறைந்துள்ள சத்துக்கள்:
வைட்டமின்கள் - , பி1, சி,கே – 19.2%, கார்போஸைட்ரேட் - 17.8 %, ஸ்டார்ச் - 10.7 %, போலேட் சத்து - 10.5 %, புரதச் சத்து - 5.4 %, சுண்ணாம்புச் சத்து - 6.7 %, பாஸ்பரஸ் - 4.8%, மாங்கனீசு - 9 %, காப்பர் - 6 %, ஜிங்க் - 5 %, பொட்டாசியம் - 3 %, மக்னீசியம் - 4 %, நார்ச்சத்து - 1.4 %, இரும்புச்சத்து - 2.5 % அடங்கியுள்ளன.

சௌசௌவின் மருத்துவப் பயன்கள்:

1. சௌசௌவை அன்றாட உணவில் பயன்படுத்தி வருபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.
2. சௌசௌ நீர்ச்சத்து அதிகமுள்ள காயாகும். ஆதலால் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். மேலும், சிறுநீர் சம்பந்தமான நோய்களிலிருந்தும் உடலை பாதுகாக்கும்.
3. உடல் வளம் பெற சௌசௌவை நாம் உண்ணும் உணவில் தவறாமல் சேர்த்து கொள்வது அவசியமாகும். இதில் உள்ள வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.
4. சௌசௌவானது நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும்.
5. சௌசௌவில் உள்ள கால்சியமானது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. மேலும் சௌசௌவில் உள்ள வைட்டமின் சி, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
6. வயிறு சம்மந்தமான நோய்களை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்தும் சக்தி சௌசௌவிற்கு உண்டு.
7. சௌசௌவானது உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைக்கும்.
8. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை சௌசௌவை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
9. சௌசௌவானது குடல் பாதையை சுத்தம் செய்து பெருங்குடல் மற்றும் சிறுகுடல் சம்மந்தமான நோய்களை நீக்கும்.



Previous Post Next Post