பச்சை பட்டாணி நன்மைகள்
பச்சைப்பட்டாணியில்
கிட்டத்தட்ட 1300 இனங்கள் உள்ளது. பச்சைப் பட்டாணிக்கு ‘தோட்டப் பட்டாணி’ இனிப்பு பட்டாணி,
இங்கிலீஸ் பட்டாணி என்றும் பெயர் உண்டு. எல்லாக் காய்கறிகளையும்விட
ஊட்டச் சத்து மிகுந்தது பச்சைப்பட்டாணி ஆகும். பச்சை பட்டாணி லேசான இனிப்பு
சுவையினை உடையது. பச்சை
பட்டாணியின் தாயகம் தென்மேற்கு ஆசியாவும் தெற்கு ஐரோப்பாவும் ஆகும்.
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக்
கொடுக்கக்கூடியது பச்சை பட்டாணி. பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் நிறைந்து
காணப்படுகிறது. 100 கிராம் பச்சை பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. இதில்
கொலஸ்ட்ரால் இல்லை. புரத சத்தும், நார்சத்தும் நிறைந்து
காணப்படுகிறது.
பட்டாணியில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே
டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ்
விட்டமின்கள் அவசியம் தேவை. பட்டாணியில் அவை உள்ளது. பட்டாணி உடலில் உள்ள
கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
பச்சை பட்டாணியின் மருத்துவப் பயன்கள்
1. கண் நன்றாக தெரிய வைட்டமின் இ மிகவும்
அவசியம். உடல்வலி, தலைவலி ஆகியன
ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன்
இருக்கவும் பட்டாணியில் உள்ள வைட்டமின்கள் உதவுகிறது.
2. பட்டாணி சாபிட்டால் வாய் துர்நாற்றமும்
குறையும். பட்டணியில் அடங்கியுள்ள நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற வைட்டமின்கள் உள்
உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன.
3. வாய், நாக்கு
முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள்
நன்கு செயல்படவும் பட்டாணியில் உள்ள வைட்டமின் டி நன்கு பயன்படுகிறது.
4. பச்சை பட்டாணியில்
ஆண்டிஅக்சிடண்டுகள் நிரம்பியுள்ளது. இது இதயத்திற்கு தேவையான ரத்தத்தை தடையின்றி
சீராக செல்ல உதவும்.
5. பச்சை பட்டாணியை தவறாமல்
எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது.
6. பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து மிகுதியாக
உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று
ஞாபகத் திறன் அதிகரிக்கும், இது அல்சைமர் நோயை தடுக்கும்.
7. பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும்
சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளது. பட்டாணியை
தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.
8. பச்சை பட்டாணி அதிக அளவு
ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது. ஃபோலேட்டுகள் பிறந்த குழந்தைகளில் நரம்புக் குழாய் சம்பந்தமான
குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
9. அதிக புரோடீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த
பச்சை பட்டாணிகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்
அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.