புடலங்காய் நன்மைகள்
தமிழகம் முழுவதும் தோட்டங்களில் புடலங்காய் பரவலாக பயிரிடப்படுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் சூட்டை
குறைக்கும். நல்ல பசியை உண்டாகும். வயிற்றுப் பொருமலை நீக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை
கொல்லும். இதன் காய், வேர், இலை மருத்துவ குணமுடையவை என்றாலும், நாம் பயன்படுத்துவது காயை
மட்டும்தான். பொதுவாக, புடலங்காயில் நீர்சத்து அதிகமாக உள்ளதால், சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு
நிறையும்.
புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை
என பலவகை உள்ளது. பன்றிப்புடலை கொடியாக இருந்தாலும் நீளமாக இல்லாமல் நீளம் குறைவாக
இருக்கும். பேய்புடல் மிகவும் கசப்பானது. அதனால் இதனை சமையலுக்கு பயன்படுத்த
மாட்டார்கள். புடலங்காயை பிஞ்சாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த
புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம்
ஏற்படும்.
புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச்
சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.
100 கிராம்
புடலங்காயில் 92.9 கிராம் நீர்ச்சத்தும், புரோட்டீன் 0.5 கிராமும், கொழுப்புச்த்து
0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோகிராமும் , விட்டமின் சி சத்தும் மற்றும் இதர சத்துகளும் அடங்கியுள்ளன.
புடலங்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
1. இதய
கோளாறு உள்ளவர்கள், புடலங்காய்
இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி
வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள்
சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள்
அனைத்தும் நீங்கும்.
2. புடலங்காயின் வேரை கைப்பிடி அளவு எடுத்து, மையாக அரைத்து சில துளி அளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால், மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் உள்ள பூச்சிககளை அழிக்கும்.
2. புடலங்காயின் வேரை கைப்பிடி அளவு எடுத்து, மையாக அரைத்து சில துளி அளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால், மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் உள்ள பூச்சிககளை அழிக்கும்.
3. புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு
புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால், அனைத்து வகையான சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும்.
4. சர்க்கரை நோயால்
அவதிப்படுபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின்
அளவு கட்டுபடும்.
5. புடலங்காய் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க
உதவுகிறது.
6. புடலங்காய் இலைச் சாற்றை சிறிது எடுத்து நீருடன்
கொத்தமல்லியையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை
வராது. காய்ச்சலையும் குணபடுத்தும்.
7. இதய கோளாறு உள்ளவர்கள் புடலங்காய் இலையின் சாறு
எடுத்து தினமும் 2 டேபிள்
ஸ்புன் அளவு 48 நாட்களுக்கு
சாப்பிட்டு வர இதயம் சம்பந்தபட்ட நோய்கள் சரியாகும்.
8. புடலங்காய்
இலையானது குடல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கிறது.
9. புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ்
போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும்
உகந்தது.
10. புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை கொண்டது. தலையில் உள்ள பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
10. புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை கொண்டது. தலையில் உள்ள பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
11. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை
ஆற்றுவதற்கும் புடலங்காய் மிகவும் சிறந்தது.
12. புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால்
உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர்
மூலம் வெளியேற்றும்.