-->

தக்காளியின் மருத்துவ பயன்கள்


தக்காளி நன்மைகள் 

ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடச் சமையலிலில் இடம் பெறும் தவிர்க்க முடியாத ஒரு பழம் தக்காளி. தக்காளியில் இரு வகைகள் உண்டு. ஒன்று நாட்டுத் தக்காளி. மற்றொன்று 'ஹைப்ரிட்' வகை. 'ஹைப்ரிட்' வகையில் விதைகள் இல்லாததால் அவற்றை சமையலில் சேர்க்காமல் சாலட், ஜுஸ் மற்றும் எல்லா உணவுகளிலும் தாராளமாகச் சேர்க்கலாம். 


நாட்டு தக்காளி புளிப்பு சுவையும், விதைகளும் நிரம்பியது. இதை சமைக்கும்போது விதைகளை வடிகட்டிய பிறகே சமைக்க வேண்டும். இல்லாவிடில் அவை சிறுநீரகத்தில், குறிப்பாக ஆண்களுக்கு சிறுநீரக கற்களை உருவாக்ககிவிடும்.

தக்களியானது கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது, மாலைக்கண் நோயை நீக்குகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். எலும்பை பலமாக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தோலை பளபளப்பாக்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பற்களும், ஈறுகளும் வலிமை பெறும். மலச்சிக்கலை நீக்கும். குடற்புண்களை ஆற்றும். களைப்பைப் போக்கும்.

ஜீரண சக்தியைத் அதிகரிக்கும். சொறி, சிரங்கு, போன்ற தோல் நோய்களைப் நீக்கும். தொற்று நோய்களைத் தவிர்க்கும். வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும். கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடல் பருமனை குறைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தக்காளி.

தக்காளிப் பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை. இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து அதிகளவு உள்ளது. கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து இதில் அதிகளவில் நிரம்பியுள்ளது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இதுவும் தக்காளியில் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் கே இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.


தக்காளியின் மருத்துவப் பயன்கள்:



1. தக்காளி ஜூசை வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
2. தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.
3. தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
4. ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவை வராமல் தடுக்கிறது.
5. பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
6. சிகரெட் மற்றும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை தக்காளி குறைக்கிறது. அதோடு நுரையிரல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
7. தக்காளியில் உள்ள குளோரின், பொட்டாசியம், ஃபைபர் மற்றும் விட்டமின் C, இதயம் ஒரே சீராக செயல்படுவதற்கு உதவுகிறது.
8. தக்காளியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், நமது உடலின் இன்சுலின் அளவையும், கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
9. தக்காளியில் உள்ள லைக்கொபின் மற்றும் மக்னீசியம் எலும்புகளின் உறுதியை அதிகமாக்கி, தைராய்டு சுரப்பியை சீராக்குகிறது.
10. தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் விட்டமின் C யானது மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.


Previous Post Next Post