வேப்ப எண்ணெய்
நம் நாட்டில் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை
உற்பத்தி செய்யப்படுகிறது. “வேப்ப எண்ணெயானது” வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு மருத்துவ குணங்கள்
கொண்ட எண்ணெய் ஆகும். வேப்ப எண்ணையில் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகள் அதிகம்
இருக்கின்றன. வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு
குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.
வேப்ப எண்ணெய் மருத்துவ நன்மைகள்
புற்றுநோயைத் தடுக்கும்
வேப்ப எண்ணெய்யில் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்கள் உள்ளன. வேப்ப
எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்றுநோய்கள் ஏற்படும்
ஆபாயம் குறைவு. மேலும் வேப்ப எண்ணெய்யில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பாதுகாப்பு
பண்புகள், புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின்
உயிரணு சுழற்சியை இடைமறித்து செயல்படுகிறது. இதனால் அவற்றின் வளர்ச்சி மற்றும் பரவல்
தடுக்கப்படுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நோயெதிர்ப்பு சக்தி என்பது நமது உடலின் பாதுகாப்பு அரண் ஆகும்.
ஆகும். இது பல்வேறு பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் பிற நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது. வேப்ப
எண்ணெய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. வேப்ப எண்ணெயில் உள்ள லிம்போசைட்கள் மற்றும்
மோனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகம். இவை இரண்டும் வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகை ஆகும்.
வேப்ப எண்ணெயில் அடிக்கடி உணவில் சேர்த்து வர தொற்று நுண்ணுயிர்களை எதிர்த்துப்
போராடும் பண்பு இயற்கையிலேயே கிடைக்கும்.
கெட்ட சுவாசம் நீக்கும்
அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளையும் நீக்கும் தன்மை வேப்ப
எண்ணைக்கு உண்டு. கெட்ட சுவாசம், ஆஸ்துமா போற்றவற்றை குணப்படுத்த வேப்ப
எண்ணெய் பயன்படுகிறது. ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்திலும் வேப்ப எண்ணெய்
நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது.
முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கிறது
முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து
பாதுகாக்கின்றன. தூசு, அழுக்கு போன்றவை நம் முகத்தில்
படும்போது முகத்தில் உள்ள நுண்துளைகள் அடைபட்டு கிருமி தொற்றின் காரணமாக முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இதை சரிசெய்ய வேப்ப
எண்ணெய்யை எடுத்து அதை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால்
சருமத்தின் எண்ணெய் பசைக் கட்டுப்படும். மேலும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் அகலும்.
கொசு விரட்டியாக செயல்படும்
நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களான மலேரியா, டெங்கு, யானைக்கால் வியாதி மற்றும்
சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாவதற்கு காரணம் கொசுக்கள் ஆகும். வேப்ப
எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து
உடலில் தேய்த்து கொண்டு உறங்கினால் கொசுக்கடி மற்றும் பூச்சி கடியிலிருந்து
இருந்து தப்பிக்கலாம். கொசுக்கள் தொல்லை நீங்க கொசுக்கள் உற்பத்தியாகும்
இடங்களாகிய தேங்கியிருக்கும் நீர்நிலை தேங்காய் ஓடுகள் போன்ற இடங்களில் வேப்ப
எண்ணெய்யை தெளித்து வந்தால் கொசுக்களின் உற்பத்தி குறைந்து கொசுத்தொல்லை நீங்கி
சுகாதாரமாக வாழலாம்.
பல் ஆரோக்கியம் மேம்படும்
பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேப்ப எண்ணெய் முக்கிய
பங்காற்றுகிறது. வேப்ப மரக் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கினால் அது பற்களைத் வலுவாக்கி
தூய்மைப்படுத்தும். சொத்தை பல்லால் அவதிப்படுபவர்கள் வேப்ப எண்ணெய்யை பஞ்சில்
நனைத்து பல்லில் வைத்தால் பல் வலிக்கு உடனே நிவாரணம் கிடைக்கும். ஈறுகளைப் பாதுகாக்கவும்,
வாயில் உண்டாகும் கிருமிகளை ஒழிக்கவும் வேப்ப எண்ணெய் பெரிதும் பயன்படுகிறது.
கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்
நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய உறுப்பு
கல்லீரல் ஆகும். வேம்பம் பூ மற்றும் வேப்ப எண்ணெய்யை அடிக்கடி நம் உணவில்
சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு 5 கிராம்
உலர்ந்த வேப்பம் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு, அதனுடன் சில துளிகள் வேப்ப எண்ணெய் சேர்த்து மூடி வைத்திருந்து
வடிகட்டிச் குடித்து வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி போன்றவை நீங்கி கல்லீரல் நன்கு இயங்கும்.
காயங்கள் குணமாகும்
வேப்ப எண்ணெய் காயங்களை விரைவில் ஆற்றும். மழைக்காலங்களில்
சேற்றில் இருக்கும் கிருமிகளினால் சிலருக்கு தொற்று ஏற்பட்டு சேற்றுப்புண்கள்
ஏற்படுகின்றன. ஷூ, காலணிகள் போன்றவை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி
தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவையும் ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம் குணமாக்க
தினமும் சிறிது வேப்ப எண்ணையை பாதிக்கபட்ட இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில்
அனைத்து வித காயங்களும் ஆறிவிடும்.