-->

ஆலிவ் ஆயில் மருத்துவ பயன்கள்


ஆலிவ் ஆயில் பயன்கள்

ஆலிவ் ஆயிலின் தனித் தன்மையே அதன் வித்தியாசமான சுவையும் மணமும் தான். இதன் காரணமாகவே மேற்கத்திய நாடுகளில் பிரதான சமையல் எண்ணையாக ஆலிவ் ஆயில் உள்ளது. ஆலிவ் ஆயிலில் பல்வேறு ராகங்கள் உள்ளன. அதில் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில் என்பதுதான் தூய்மையானது, இது ஆலிவ் பழச் சாற்றில் இருந்து தயாரிக்கப்டுகிறது. இது எந்த விதக் கலப்பும் இல்லாதது. அதனால் அது இயற்கையான ஆலிவ் ருசியுடன் இருக்கும். இதனை சூடாக்காமல் உணவுகளில் அப்படியே பயன்படுத்தினால் இதன் ஊட்டச்சத்து முழுவதுமாக உடலுக்கு கிடைக்கும். காய்கறி சாலட் மேல் ஊற்றி சாப்பிடலாம். பரிமாறுவதற்கு முன் செய்யப்படும் அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம். இந்த எண்ணையை பொரிக்க பயன்படுத்த கூடாது. அதிகமான சூட்டில் இந்த எண்ணெய் தன் இயற்கைத் தன்மையை இழந்து விடும்.

ஆலிவ் ஆயில் மருத்துவ நன்மைகள்


சாதாரணமாக நாம் வாங்கும் ஆலிவ் ஆயில் ஆனது ரிபைன்ட் ஆலிவ் ஆயில் மற்றும் விர்ஜின் ஆயில் இரண்டும் சேர்ந்த கலவையாகும். நீங்கள் ஆரோக்கியத்திற்காக ஆலிவ் ஆயிலை வாங்க விரும்பினால் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில் தான் சிறந்த தேர்வு. இதில் கொழுப்பு, ஒமேகா, புரத சத்து, வைட்டமின், வைட்டமின்கள் போன்றவை அடங்கியுள்ளது.

ஆலிவ் ஆயிலின் மருத்துவ குணங்கள்

ஆலிவ் ஆயில் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இந்த எண்ணெய் நம்முடைய உடல்நலத்திற்கும், சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். இந்த எண்ணையில் உள்ள வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை காக்க மிகவும் உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்.

இயற்கை மருத்துவம்

நம்முடைய அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் இந்த ஆலிவ் ஆயிலின் பங்கு மிக பெரியது. கடைகளில் விற்கும் வேதி பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர நிரந்தர நிவாரணம் தராது. இயற்கை முறையில் உடலில் உள்ள நோய்களை குணமாக்கும் சக்தி இந்த ஆலிவ் ஆயிலிற்கு நிறையவே உள்ளது.

மாரடைப்பை தடுக்கும்

ஆலிவ் ஆயில் கொண்டு சமைக்கும் உணவை நாம் எடுத்துக்கொள்ளும் போது கெட்ட கொழுப்பு உடலில் சேராது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு செல்களை அகற்றி நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய உதவுகின்றது. கெட்ட கொழுப்பு உடலில் இருந்து அகற்றப்படுவதால் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கபடுகிறது.

சர்க்கரை அளவு

இன்றைய மாறிவரும் காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. ஆலிவ் ஆயிலை நாம் சமையலுக்கு பயன்படுத்தினால் நம் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவு சீராகும். மேலும் இது நாள் பட்ட சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

மார்பக புற்றுநோய்


தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயில் ஏற்படாமல் தடுக்கலாம். இதில் உள்ள ‘ஒலெகெந்தஸ்’ எனும் ஊட்டச்சத்து நம்முடைய உடலில் உள்ள திசுக்களின் அழற்சியை தடுக்கிறது. மேலும் இதில் எண்ணற்ற வைட்டமின்களும் ஆன்டி-ஆக்சிடென்ட்களும் உள்ளது. எனவே பெண்களை அதிகமாக தாக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் தோல் புற்றுநோய், உடல்குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படாமலும் பாதுகாக்கும்.

மனஅழுத்தம்

ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் சேர்த்து கொள்ள நம் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் நம்மை மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும்.

கல்லீரல்

எலுமிச்சை சாறுடன் இந்த ஆலிவ் ஆயிலை கலந்து உபயோகித்தால் கல்லீரலில் ஆக்சிஜனேற்ற பாதிப்பு பிரச்சனை நீங்கும். மேலும் நம்முடைய கல்லீரலையும் வலுவாக்கும். தினமும் இந்த ஆலிவ் ஆயிலை பயன்படுத்தினால் ஆக்சிஜனேற்ற தடுப்பாக செயல்பட்டு நம்முடைய கல்லீரலை பாதுகாக்கும். மேலும் இது கல்லீரல் சுத்திகரிப்பனாகவும் செயல்படும்.

ஞாபக மறதி

ஆலிவ் ஆயில் உபயோகிக்கும்போது மூளையில் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் குணமாகும். இது நம்முடைய மூளையில் ஏற்படும் அளவுக்கதிகமான புரத படலத்தை தடுக்கிறது. இதனால் ஞாபக மறதி ஏற்படும் அபாயம் தடுக்கபடுகிறது. இதற்க்கு காரணம் இந்த ஆலிவ் ஆயிலில் உள்ள ‘ஒகெலானாய்டு’ தான.

நோய் எதிர்ப்பு சக்தி

தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நம்முடைய இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆண்டிஆக்ஸிடண்ட்

ஆலிவ் ஆயில் ஒரு மிகச்சிறந்த ஆண்டி ஆக்ஸிடண்ட்டாக செயல்படுகின்றது. நேயை எதிர்த்து போராடும் சக்தி ஆலிவ் ஆயிலிற்கு இயற்கையாகவே உள்ளது. இதனால் நோயை உண்டாக்கும் கிருமிகளை ஆரம்பத்திலேயே எதர்த்து போராடி அழிக்கும்.

ஆலிவ் எண்ணெய் நன்மைகள்

எடை குறைப்பு

தினமும் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும். ஆலிவ் ஆயிலை சுடு தண்ணீரில் கலந்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

செரிமானத்தை அதிகரிக்கின்றது

இயற்கையாகவே ஆலிவ் ஆயிலிற்கு செரிமானத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. செரிமான மண்டலத்தை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் திறன் ஆலிவ் ஆயிலிற்கு உள்ளது. இதனால் செரிமானப் பிரச்சணை இருப்பவர்கள் ஆலிவ் ஆயிலை தொடர்ந்து உபயோகிக்கலாம்.

வலுவான எலும்புகள்

ஆலிவ் ஆயிலை உபயோகித்தால் நம்முடைய எலும்புகளுக்கு சக்தியை தரும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கும். இதில் உள்ள ‘ஒலெயூரோபின்’ சத்துக்கு நம்முடைய எலும்பை வலுவாக்கும் சக்தி உள்ளது.
Previous Post Next Post