பாமாயில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது
செம்பனை எனப்படும் ஒருவகை
பனைமரத்தில் காய்க்கும் பழங்களில் இருந்து பாமாயில் எனப்படும் எண்ணெய்
தயாரிக்கப்படுகிறது. செம்பனை எனப்படுவது தென்னை மற்றும் பனைமரத்தை போன்றதொரு மரம்.
இதை எண்ணெய்ப் பனை என்கின்றனர். மேலும்
இம்மரம் பாமாயில் பனை,
செம்பனை எனவும்
அழைக்கப்படுகிறது.
இரண்டு வகை பனை இனங்களில்
இருந்து பாமாயில் தயாரிக்கபடுகிறது. ஒன்று ஆப்ரிக்கன் பாமாயில், மற்றொன்று
அமெரிக்கன் பாமாயில். ஆப்பிரிக்காவின் பாமாயில் என்பது ‘எலியிஸ் குயினென்சிஸ்’
என்கிற மர இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. அமெரிக்கன் பாமாயில் என்பது ‘எலியிஸ்
ஒலிபெரா’ என்கிற இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இவை தவிர ‘மாரிபாபனை’ என்கிற
மரத்திலிருந்தும் பாமாயில் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சிவந்த நிறத்தில்
இருக்கும்.
ஆப்பிரிக்க எண்ணெய்ப் பனை
மரமானது 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. ஒரே மரத்தில் ஆண், மற்றும் பெண் பூக்கள் தனித்தனி பாளையில் காணப்படும். ஒரு
பாளையில் பல நூறு பூக்கள் மலரும். காய்கள் 5
– 6 மாதத்தில் முதிர்ச்சி
அடையும். காய்கள் நெருக்கமாக ஒரு கொத்தாகக் காணப்படும். ஒரு குலையில் 150 முதல்
200 வரை காய்கள் இருக்கும். இதன் பழங்கள் சிவப்பு நிறம் கொண்டவை. எனவேதான் இதன்
நிறத்தை வைத்து இது செம்பனை என்று அழைக்கப்டுகிறது.
இது தென்னை மரம் போன்று
வருடம் முழுவதும் பலன் தரும். சுமார் 80 முதல் 100 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக வளர்ந்து பலன் தரும்.
முதல் 25 ஆண்டுகள் அதிக பழங்கள் காய்க்கும். இதன் பழங்கள் உருண்டையாக இருக்கும். பழத்தினுள்
கருநிறத்தில் கொட்டைகள் உள்ளன.
இந்த பனை மரத்தின் பழத்தில் இருந்து
இரண்டு விதமான எண்ணெய் கிடைக்கின்றது . பழத்தின் சதைப் பகுதியைத் தனியாக பிரித்து
அதிலிருந்து கச்சா பாமாயில் எடுக்கின்றனர். இதை சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்தியப் பின் கிடைப்பதுதான் பாமாயில். இது
சமையல் எண்ணெய் மற்றும் தாவர எண்ணெய் ஆகும். இதே எண்ணெயை மீண்டும் சுத்திகரிக்கும்
போது சிகப்பு நிறம் போய் விடும். அப்போது அது வெள்ளை நிற பாமாயிலாகக் கிடைக்கிறது.
மற்றொரு வகை எண்ணெய் இதன்
கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பிலிருந்து எடுக்கப்படுகிறது. பருப்பிலிருந்து
எடுக்கும் எண்ணெய் மஞ்சளாகத் தேங்காய் எண்ணெய் போல இருக்கும். இது பருப்பு
எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது.
பருப்பில் 18 சதவீதம் எண்ணெய்ச் சத்து உள்ளது.
இப்பனை மரங்கள் இந்தோனேசியா, மலேசியா,
நைசீரியா முதலிய நாடுகளில்
பெருமளவு பயிர்செய்யப் படுகிறது.
பாமாயிலில் உள்ள சத்துகள்
பாமாயிலில் ‘பால்மிட்டிக்
அமிலம்’ உள்ளது. ஆகவேதான் இதற்குப்
பாமாயில் எனப் பெயர் வந்தது. இந்த எண்ணெயில் அதிகமான கரோட்டின், அல்பா கரோட்டின்,
பீட்டா கரோட்டின் மற்றும்
லைகோபீன் ஆகியவை உள்ளன. ஆகவேதான் இதன் எண்ணெய் அடர்ந்த சிகப்பு நிறத்தில் உள்ளது.
இதில் கொழுப்பு அமிலங்கள்,
கிளைசரால், நிறைவுறாக் கொழுப்பு போன்றவை உள்ளன. இதில் அதிகக்
கொழுப்புச் சத்து இருக்கிறது.
பாமாயிலின் பயன்பாடுகள்
இதில் 10 சதவீதம் ‘லினோலியிக்
அமிலம்’ இருப்பதால் கரோட்டின் மிக்கது. இது ‘வைட்டமின் A’ குறைபாட்டினால் ஏற்படும் நோயைத் தடுக்கிறது. பாமாயில் சோப்பு, சாக்கலேட்டு,
மருந்து, வாசனைப் பொருள், ஐஸ் கிரீம், செயற்கை வெண்ணெய் கொழுப்பு, சமையல் எண்ணெய்,
இனிப்பு வகைகள் தயாரிக்க
பயன்படுகிறது. இதன் புண்ணாக்கு மாட்டுத் தீவனமாகிறது. பாமாயிலில் இருந்து மெத்தில்
மற்றும் பயோடீசலும் தயாரிக்கப்படுகிறது.
புற்றுநோயயை தடுக்கும்
பொதுவாக எண்ணெய் வகைகளிலேயே
பாமாயில் பற்றிய தவறான கருத்து பொதுமக்களிடம் உள்ளது. இதன் அதிக
உற்பத்தி காரணமாக இதன் விலை மலிவு. விலை மலிவான பொருள் என்றாலே அது தரத்திலும்
மலிவாக இருக்கும் என்று நினைப்பது போன்றே பாமாயிலையும் தவறாக கருதுகிறோம்.
பொதுவாக எண்ணெய் சேர்த்த பொருட்களை
அதிகமாக சாப்பிட்டால் புற்று நோய் வரும் என்று கூறப்படுகிறது. ஆனால்
பாமாயில் எண்ணெயில் புற்று நோய் வராமல் தடுக்கும் கரோட்டின் என்னும்
ஒரு சத்துப் பொருள் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சரி பாமாயிலை உபயோகிப்பதால் என்னென்ன நன்மை மற்றும் தீமை
ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்போம்,
பாமாயில் நன்மைகள்
1. பாமாயிலில் உள்ள பீட்டா
கரோட்டின் பார்வை திறனை அதிகரிக்க செய்யும்.
2. பாமாயில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
3. பாமாயிலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இதன் காரணமாக முதுமையை தள்ளிபோட்டு இளமை தோற்றத்தை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
4. உடலுக்கு தேவையான ‘விட்டமின் ஏ’ பாமாயிலில் உள்ளது. விட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்கள் பாமாயிலை உபயோகிக்கலாம்.
2. பாமாயில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
3. பாமாயிலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இதன் காரணமாக முதுமையை தள்ளிபோட்டு இளமை தோற்றத்தை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
4. உடலுக்கு தேவையான ‘விட்டமின் ஏ’ பாமாயிலில் உள்ளது. விட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்கள் பாமாயிலை உபயோகிக்கலாம்.
பாமாயில் தீமைகள்
1. பாமாயிலில் அதிகமான
கொழுப்பு உள்ளது என்பதால் இதய நோய் உள்ளவர்கள் இதை தொடவே கூடாது.
2. அதிக உடல் பருமன் கொண்டவர்கள்
பாமாயில் சாப்பிட்டால் உடல் எடை இன்னும் கூடும்.
3. வளர்சிதை நோயை ஏற்படுத்துவதில் பாமாயில் உள்ள கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் வளர்சிதை நோய் உள்ளவர்கள் பாமாயிலை சேர்த்து சாப்பிடக்கூடாது.
4. பாமாயிலை உணவில் சேர்த்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
3. வளர்சிதை நோயை ஏற்படுத்துவதில் பாமாயில் உள்ள கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் வளர்சிதை நோய் உள்ளவர்கள் பாமாயிலை சேர்த்து சாப்பிடக்கூடாது.
4. பாமாயிலை உணவில் சேர்த்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
5. பாமாயிலில் கொழுப்பு சத்து
அதிகம் உள்ளது என்பதால் அதிக கொழுப்பு சத்து உள்ளவர்கள் இவற்றை உணவில்
சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.