-->

பாதாம் பருப்பின் நன்மைகள் மற்றும் பயன்கள்


பாதாம் பருப்பு

பாதாம் மரம் வாதுமை மரம் என்று அழைக்கபடுகிறது. பாதாம் பருப்பை வாதுமை பருப்பு எனவும் கூறுவர். வாதுமை கொட்டைகளை ‘வலாங்கொட்டை’ எனவும் கூறுவர். இக்கொட்டைகள் சுவைமிக்கவை. பாதாம் மரங்கள் மத்திய கிழக்கு நாடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. இவை ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் வளர்கின்றன.

பாதாம் பருப்பு மருத்துவ குணங்கள்


பாதாமில் உள்ள சத்துக்கள்

பாதாம் பருப்பானது உடலை செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவாகும். பாதாம் பருப்பில் வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. பாதாமில் இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகமாகவும், உடலுக்கு கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் உள்ளது. பாதாமில் காணப்படும் நார்ச்சத்துகளும், ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், மற்றும் தாது உப்புகளும், குளுட்டாமிக் அமிலமும் உள்ளது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை தோல் நீக்கி சாப்பிட வேண்டும்.

பாதாமில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாம் பருப்பில் உள்ளது. இதனால் மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், முடி சம்பந்தமான பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

பாதாமின் மருத்துவ குணங்கள்

இதய ஆரோக்கியம் மேம்படும்

பாதாம் பருப்பின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்புகளாகும். இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக்  குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புதான் அதற்கு காரணம்.

எடை குறையும்

எவ்வளவு முயற்சி செய்தும் எடையை குறைக்க முடியவில்லை என நினைப்பவர்கள், வாரத்திற்க்கு 2 முறை குறைந்தது 5 பாதாம் பருப்பை எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும்

பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும்  மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது, இவை புத்திக்கூர்மைக்கு உதவும் நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

ஞாபக மறதி

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோய் இப்போது சிறுவயதினரையும் விட்டுவைப்பதில்லை. இந்த ஞாபக மறதி வியாதியை தடுப்பதில்  பாதாம் பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. படிக்கிற பிள்ளைகளுக்குப் படித்த பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும். போதுமான அளவு பாதாம் பருப்பு சாப்பிடுகிற குழந்தைகளின்  மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

பாதாம் நன்மைகள்

இதயத்தை பாதுகாக்கும்

கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. பாதாம் பருப்பில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் அறவே இல்லை. எனவே பாதாமை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மலச்சிக்கல்

உடலிற்கு ஒவ்வாத உணவுகளையும் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளையும் அதிகம் உண்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. பாதாம் பருப்பில் உணவை செரிமானம் செய்யும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. பாதாமை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை பிரச்னைகளும் நீங்கும்.

சருமத்தை பாதுகாக்கும்

பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த பாதாமை நாம் சாப்பிடுவதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதுடன், நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளிருந்து நம்மை காக்கலாம்.

Previous Post Next Post